Skip to main content

மதுரை, சிவகங்கை பகுதியில் கனிமொழி எம்.பி., மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைசார் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வு பயணத்தின் ஒரு பகுதியாக, அரசு பள்ளி மாணவர்களுக்காக  செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து 30.8.2023 அன்று மதுரையில் உள்ள சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.


இதேபோன்று 29.8.2023 அன்று சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அருங்காட்சியகத்தையும், கொந்தகை, கீழடி பகுதியில் அமைந்திருக்கும் அகழ்வாய்வு இடங்களையும் தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் 

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments