Skip to main content

தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக பவானி நியமனம்: மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக பழனிசெட்டிபட்டியை சேர்ந்த எம்.பவானி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை மகளிர் அணி அமைப்பாளராக நியமனம் செய்த தமிழ்நாடு முதல்வர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க இளைஞரணி செயலாளர், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க துணை பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எம்.பவானி நன்றிகளை தெரிவித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எம்.பவானி, தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தேனி நகர தி.மு.க அலுவலகத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது மகளிர் அணி துணைத்தலைவி ரெஜினா பேகம், துணை அமைப்பாளர்கள் ராதிகா, அழகுமணி, தி.மு.க சமூக வலைதள பொறுப்பாளர்கள் அனுசுயா, இந்துமதி மற்றும் தேனி நகர தி.மு.க செயலாளர் நாராயணபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.


K.சரவணன், சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ் 

Comments