Skip to main content

ட்விட்டர் கணக்கில் கிரே டிக் பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவரானார் கனிமொழி கருணாநிதி எம்.பி.,


ட்விட்டர் நிறுவனம் தலைவர்கள், வீரர்கள், நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோர் சொந்த ட்விட்டர் கணக்கிற்கு நீல நிற அடையாள குறியை கொடுத்திருக்கும். சமீபத்தில் ட்விட்டர் இந்த முறையை மாற்றி நீலம் நிறம் நிறுபிக்கப்பட்ட நபர்களுக்கும், சாம்பல் ( கிரே) நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்கள் அல்லது அரசுகளின் கணக்குகளுக்கும், தங்க நிறம் தனியார்/ பொது நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. 


இந்த நிலையில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கருணாநிதி அவர்களின் ட்விட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு/ பன்னாட்டு அரசின் நிறவன குறிப்பெற்றுள்ள முதல் அரசியல் தலைவராக கனிமொழி கருணாநிதி அவர்கள் பதிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


                                                        G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்

Comments