வைகை அணையை தூர்வார வேண்டும்: தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.ஆர். ராஜன் மற்றும் தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் M.K.M. முத்துராமலிங்கம் ஆகியோர் வலியுறுத்தல்
தேனி, ஜூன்.1- தேனி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், அணையை உடனடியாக தூர்வாரி அதன் நீர்த்தேக்க திறனை அதிகரிக்க தமிழக அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TAFVA) மாநில பொதுச்செயலாளர் வி.ஆர். ராஜன் மற்றும் தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் M.K.M. முத்துராமலிங்கம் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். வைகை அணையை, மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த அணையின் நீர் தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், அணையின் அடிப்பகுதியில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள வண்டல் மண் மற்றும் படிவங்களை அகற்றும் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது காலத்தின் கட்டாய...