தேனி மாவட்டத்தில் குடிநீர், நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆற்றுப்பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: கம்பம் எம்.எல்.ஏ-விடம் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
தேனி, 28-
தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்களுக்கு தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் மற்றும் வினோரா பவுண்டேசன் இயக்குனர் லென். டாக்டர் வி.ஆர். ராஜன் தேனி மாவட்டத்தில் குடிநீர், நீர்வள பாதுகாப்பு, ஆற்றுப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேனி மாவட்ட மக்களின் எதிர்கால குடிநீர் பாதுகாப்பு, நிலத்தடி நீர் உயர்வு, விவசாய வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட திட்டங்களை தங்களது தலைமையில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. “ஒரு குடம் – ஒரு ரூபாய்” மினரல் வாட்டர் திட்டம்
கிராம ஊராட்சிகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும் வகையில் “ஒரு குடம் – ஒரு ரூபாய்” மினரல் வாட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
-இந்த திட்டம் ஆந்திரப் பிரதேசத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
-CSR நிதி மூலம் RO குடிநீர் மையங்கள் அமைக்கலாம்.
-குடிநீரால் பரவும் நோய்கள் குறையும்.
-அனைத்து கிராம மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சுத்தமான குடிநீர் கிடைக்கும்.
2.முல்லைப் பெரியாறு ஆற்றுப்பகுதியில் நீர்தேக்கங்கள் மற்றும் செக் டேம்கள்
முல்லைப் பெரியாறு தண்ணீர் வரத்து பகுதிகளில்:
- கம்பம்
- உத்தமபாளையம்
- சின்னமனூர்
-தேனி ஆகிய பகுதிகளில் சிறிய மற்றும் நடுத்தர நீர்தேக்கங்கள் அமைக்க வேண்டும்.
மேலும் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் பல இடங்களில் செக் டேம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம்:
- நிலத்தடி நீர் உயர்வு ஏற்படும்
- குடிநீர் பற்றாக்குறை தீரும்
- விவசாயம் செழிக்கும்
-மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படும்.
3.முல்லைப் பெரியாறு மற்றும் வைகை ஆற்றுப் பாதுகாப்பு
முல்லைப் பெரியாறு மற்றும் வைகை ஆறுகள் தற்போது சுருங்கி பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. எனவே:
-ஒரிஜினல் சர்வே செய்து ஆற்றின் எல்லைகளை மீட்க வேண்டும்.
-சாக்கடை மற்றும் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்.
-ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
-ஆற்றுப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டம் உருவாக்க வேண்டும்.
4.தேனி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு திட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து:
- ஏரிகள்
- குளங்கள்
- குட்டைகள்
- கண்மாய்கள்
- ஓடைகள்
- வைகை அணை சுற்றுப்பகுதிகள்
ஆகிய நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மேலும்:- பழைய சர்வே மற்றும் நில அளவைத்தாள் அடிப்படையில் எல்லைகளை மீட்க வேண்டும்.
-அனைத்து முக்கிய நீர்நிலைகளுக்கும் நிரந்தர வேலி அமைக்க வேண்டும்.
-நீர்நிலைகளை தூர்வாரி நீர்தேக்க திறனை அதிகரிக்க வேண்டும்.
-நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.
-மழைநீர் சேமிப்பு திறனை உயர்த்த வேண்டும்.
5.பதினெட்டாம் கால்வாய் திட்ட பராமரிப்பு
தேனி மாவட்ட விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள பதினெட்டாம் கால்வாய் திட்டத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும்.
-கால்வாய்களில் உள்ள மணல் மற்றும் கழிவுகளை அகற்ற வேண்டும்.
-உடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும்.
-விவசாயிகளுக்கு தடையின்றி நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சட்டவிரோத மோட்டார் இணைப்புகளை தடுக்க வேண்டும்.
-கால்வாய் ஓரங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும்.
6. வைகை மற்றும் முல்லைப் பெரியாறு பாதுகாப்பு சிறப்பு குழு
வைகை ஆறு மற்றும் முல்லைப் பெரியாறு ஆறுகளை பாதுகாக்க தங்களது தலைமையில் “ஆற்றுப் பாதுகாப்பு மற்றும் நீர்வள மேம்பாட்டு சிறப்பு குழு” அமைக்க வேண்டும்.
அக்குழுவில்:
-பொதுப்பணித்துறை அதிகாரிகள்
-வருவாய்த்துறை அதிகாரிகள்
- விவசாயிகள் பிரதிநிதிகள்
- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
- சமூக அமைப்புகள்
- நீர்வள நிபுணர்கள்
ஆகியோர் இணைக்கப்பட வேண்டும்.
இந்த குழுவின் பணிகள்:
-ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்
-ஆற்றின் எல்லைகளை பாதுகாத்தல்
-சாக்கடை நீர் கலப்பதை தடுக்குதல்
-மரக்கன்றுகள் நடுதல்
-செக் டேம்கள் மற்றும் நீர்தேக்கங்களை கண்காணித்தல்
-நீர்வள பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால்:
-தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் உயர்வு ஏற்படும்
-குடிநீர் பிரச்சினை குறையும்
-விவசாய உற்பத்தி அதிகரிக்கும்
-சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்
-எதிர்கால தலைமுறைக்கு நீர்வள பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
...........................
நாகராஜ் தலைமை நிருபர்
செல் : 9842145271




Comments