Skip to main content

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஜூன் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்

தேனி, மே.30-

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி அவர்களின் ஆணைக்கிணங்க 2026 சட்டமன்ற தேர்தலில் தற்போது தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தார்.

ஆனால் தற்போது முதல்வர் அவர்கள் விவசாயிகள் சோறு போடும் வயிற்றில் அடித்து உள்ளார். பயிர் கடன் தள்ளுபடி விஞ்ஞான பூர்வமான செயலை விவசாயிகள் மத்தியில் கலங்கத்தை ஏற்படுத்தி விட்டார். ஆகையால் தமிழகம் முழுவதும் மற்றும் தேனி மாவட்டத்தில் 1.6.2026 அன்று திங்கட்கிழமை (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசுக்கு கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

எனவே தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும், அனைத்து அமைப்புகளும் நமது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு நமது உரிமையே வென்றெடுப்போம். என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments