Skip to main content

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணி வார வழிபாட்டு நிகழ்வில் வலியுறுத்தல்

தேனி, மே.25-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாட்டு நிகழ்வு 24.5.2026 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். தேனி நகர துணை செயலாளர் இராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சக்திவேல் வழிகாட்டினார்.
 
நிகழ்ச்சியில் சிறப்பு. அழைப்பாளராக தமிழக ஆலய பாதுகாப்பு மாநில அமைப்பாளர் மானனீய சுவாமி சுடலையானந்தா கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.

இந்த வார வழிபாட்டு நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு, சமூக ஒற்றுமை, இந்து சமுதாய முன்னேற்றம் மற்றும் மக்கள் நலன் குறித்து தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியின் போது சமூக நலன், மக்களின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு, கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1
தமிழக அரசு பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, விவசாயிகளின் சிக்கல்கள், குடிநீர் மற்றும் சாலை வசதிகள் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், மக்கள் நலனுடன் தொடர்பில்லாத பல்வேறு விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி வருவது வருத்தமளிக்கிறது.

மேலும், தமிழக சட்டசபையில் அரசின் செலவுக் கணக்குகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்து வருகின்றன. மக்களின் வரிப்பணத்தை வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
எனவே, தமிழக அரசு மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்கி செயல்பட வேண்டும் என்றும், அனைத்து செலவுக் கணக்குகளும் வெளிப்படையாக மக்களுக்கு விளக்கப்பட வேண்டும் என்றும் இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது.

தீர்மானம் – 2
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கும் மிகக் கொடூரமான செயல் ஆகும். இத்தகைய குற்றங்கள் சமூகத்தின் மனச்சாட்சியை கேள்விக்குள்ளாக்குகின்றன.
இந்த அராஜக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான மற்றும் விரைவான தண்டனை வழங்க வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், திருச்சியில் அரசு மருத்துவமனையில் படித்து வந்த செவிலியர் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள அரசு வேலைவாய்ப்பை, தகுதியின் அடிப்படையில் விரைவாக வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
.................................
நாகராஜ், தலைமை நிருபர் 
செல் : 9842145271

Comments