தேனியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் : சுகாதாரம் போன்ற அடிப்படை பணிகளுக்காக தொடர்ந்து போராடி வரும் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன்
தேனி, மே.24-
தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாதாள சாக்கடை விரிவாக்கத்தில் அல்லிநகரம் 5-வது வார்டு மச்சால் தெருவில் பாதாளச் சாக்கடைக்காக ( LS lifting station ) குழி தோண்டி அடைக்கப்படாமல் உள்ளன.
அதுபோல பாதாளச்சாக்கடை குழிகள் கடந்த (26.5.2025) அன்று தொடங்கி பணியும் ஒரு வருடமாக முடிவடையாமல் குழிகள் மூடப்படாமல் உள்ளன. பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகள் விழுந்து விடும் அபாயம் இருப்பதால் கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
மேலும் மூன்று இடங்களில் ட்ரைனேஜ் உடைத்து கழிவுநீர் மந்தைக்குளம் கண்மாயில் திருப்பிவிடப்பட்டு வெகு நாட்களாகிறது. மச்சால் தெரு மற்றும் கிணற்று தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்கள் இன்று வரை மூடப்படாமல் உள்ளது.
இதேபோன்று சாக்கடை கால்வாய்கள் தூர் வாருவது, ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் குப்பைகளை அகற்றுவது போன்ற அடிப்படை பணிகளுக்காக கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் தொடர்ந்து போராடி வருகிறார்.
எனவே தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை தொய்வின்றி சீராக விரைவில் சரி செய்திட வேண்டும் என்று கவுன்சிலர் Dr.s.கிருஷ்ணபிரபா அய்யப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
..............................
நாகராஜ் தலைமை நிருபர்
செல் : 9842145271





Comments