Skip to main content

டிஎன்டி சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய கோரி: கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத்மிஸ்ராவிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு

தேனி, மே.25-

தேனி மாவட்டம், கம்பம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் P.L.A. ஜெகநாத்மிஸ்ரா அவர்களை அவர்களின் இல்லத்தில் சீர்மரபினர் நலச்சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் துரைமணி ஆலோசனையின் பேரில் கம்பம் டி.என்.டி  இளைஞரணி சார்பில்  மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் கெளதம் தலைமையில், மாநில செயலாளர்கள் ஜெயபால், ஜெயக்குமார், கவியரசன், ஐ.டி. விங். நதீஸ்குமார், தேனிமாவட்ட மகளிர் அனி தலைவி வியலட்சுமி, சிறுவர்கள் உள்பட சீர்மரபினர் நலச்சங்கத்தினர் DNT சான்றிதழ் வேண்டி கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தமிழகத்தில் 68 சமூகங்களுக்கு கடந்த 1947-க்கு பிறகு டி.என்.டி (Denotified Tribes) என்ற அடிப்படையில் கட்டணமில்லா கல்விச்சலுகை உள்பட சில வளர்ச்சி உரிமைகள் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 1979-ல் ஒரு தவறான அரசாணை (1310) மூலம் அச்சமூகங்களின் வகுப்பு பெயரில் இருந்த பழங்குடி என்று சொல்நீக்கப்பட்டு இச்சமூகங்களின்  உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் பல நிலைகளில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 1998-ம் ஆண்டே தேவர் பேரவை, தலைவர் கலைஞரிடம் மீண்டும் டி.என்.டி (Denotified Tribes) வகுப்பு பெயரை இச்சமூகங்களுக்கு வழங்க கோரிக்கை வைத்தபோது அப்போதையை அமைச்சரவையும் அதை உடனே பரிசீலிக்க பரிந்துரைத்தும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசாங்கம் தான் செய்ய முடியும் என்று ஆலோசனையை வழங்கியதால் அக்கோரிக்கை தடைபட்டுவிட்டது. 

இதன் பின்னர் கடந்த 2014-ல் எமது சமூக இளைஞர்கள் இந்த அநீதியை அறிந்து மீண்டும் டி.என்.டி கோரிக்கை வைத்த போது கடந்த 2015-ல் அதே பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மீண்டும் அரசுக்கு வேறு ஒரு தவறான கருத்தை சொல்லி, அதாவது மீண்டும் டி.என்.டி வழங்க தமிழ்நாடு இடஒதுக்கீட்டு சட்டத்தைத் திருத்த வேண்டும். ஆனால் அச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்சமயம் இக்கோரிக்கையைப் பரிசீலிக்க முடியாது என்று இக்கோரிக்கை கிடப்பில் போட்டது.
இருப்பினும் தொடர் போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2018-ல் அதுல்யா மிஸ்ரா தலைமையில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு இக்கோரிக்கையை விரிவாக ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள வழக்கினால் டி.என்.டி வழங்க எந்த தடையுமில்லை என்று பரிந்துரைத்ததை அரசு ஏற்று, அ.ஆ. 26 நாள் 8.3.2019 மூலம் கடந்த 1979-ம் ஆண்டு அரசாணை திரும்ப பெறப்பட்டது. ஆனால் எடப்பாடி அரசு மீண்டும் ஒரு புது அநீதியாக ஒரே நபருக்கு மத்திய அரசுக்கு டி.என்.டி மாநில அரசுக்கு டி.என்.சி என்று இரண்டு சான்று வழங்க உத்தரவிட்டது.

இந்த அரசாணையை திருத்தி ஒரே டி.என்.டி சான்று வழங்க கோரி போராடினோம். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இந்த சமூக அநீதியை நீக்கி, ஒரே டி.என்.டி சான்று வழங்கப்படும் என்று வாக்குறுதியத்தது. அதன்படி 16.3.2024 அன்று டி.என்.டி/டி.என்.சி இரட்டைச்சான்றிதழை தவிர்த்து ஒரே சாதிச்சான்று வழங்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார். ஆனால் இன்று வரை எந்த அரசாணையும் பிறப்பிக்காமல் டிஎன்டி/டிஎன்சி என்ற இரட்டைச்சான்று முறையே தொடர்கிறது. ஏமாற்றப்பட்ட 2 கோடி டிஎன்டி மக்கள் அதிமுக, திமுக விற்கு எதிராக வாக்களித்து த.வெ.க-வை வெற்றி பெற செய்துள்ளனர்.
எனவே இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகண்டு, 2 கோடி டிஎன்டி மக்களின் நீண்டனால் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி த.வெ.க அரசுக்கு நன்மதிப்பை பெற ஆவண செய்யுமாறு கேட்டுகொள்கிறோம். இதனால் அரசுக்கு எந்த நிதி சுமையே, சட்ட சிக்கலோ இல்லை என்பதை பணிந்து இந்த மனுவில் சமர்ப்பிக்கின்றோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
..........................
நாகராஜ், தலைமை நிருபர் 
செல் : 9842145271

Comments