Skip to main content

Posts

தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள் : மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு

தேனி, மே.14- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில் இன்று (14.5.2026) நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றதை தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மீறுசமுத்திரம் கண்மாயின் கரையை பலப்படுத்துதல், நடைபாதை, பூங்கா, தடுப்புச் சுவர், படகுகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில், அலுவலக கட்டிடம், பாதுகாவலர் அறை, நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, சாய்வுதளம், அமரும் மேடை, உணவுக்கூடம் மற்றும் பாலம் அமைத்தல் மேலும், ஆகாய தாமரை அகற்றுதல், மரங்கள் நடுதல், பறவைகள் தீவு அமைத்தல், கண்...

வீரபாண்டி திருவிழாவில் இருந்து வீடு திரும்பிய குடும்பத்தை வழிமறித்து தங்க தாலியை பறிக்க முயற்சி : மர்ம நபர்கள் கைவரிசையால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதை தடுக்க வேண்டுமென இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்

தேனி, மே.14- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் தலைமையில் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், தேனி நகர பொருளாளர் நாகராஜ், நகர துணைத்தலைவர் சிவா, நகர செயலாளர் அழகு பாண்டி ஆகியோர் பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ஜெ. மகேஷ் அவர்களிடம் நேரில் புகார் ஒன்று மனு அளித்துள்ளனர்.  அந்த மனுவில் தேனி மாவட்டம், தேனி அல்லிநகரத்தை சேர்ந்த இந்து எழுச்சி முன்னணி தேனி நகர துணை செயலாளர் ரெங்கராஜ் ஆகிய நானும், எனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து விட்டு பெரியகுளம் செல்லும் புதிய பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது போடி விலக்கு ரவுண்டானாவை தாண்டி ஆதிபட்டி பாலம் அருகே வந்த போது, ஒரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து திடீரென இவர்களின் வண்டியை வழிமறித்து கீழே தள்ளி விட்டனர். அதில் வண்டியில் மூன்றாவதாக இருந்த மர்ம நபர், தனது கையில் வைத்திருந்த குறடினால் ரெங்கராஜன் அவர்களின் மனைவி நாகராணி அவர்களின் கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் தங்க தாலிக்கொடியை அறுக்க முயன்றுள்ளார். அந்த குறடு கழுத்தில் பட்டதால் கடு...

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் போது ஓபிசி/டிஎன்டி வகுப்பையும் சேர்க்க வேண்டும்: தேனி கலெக்டர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு

தேனி, மே.11- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் A.கௌதமன் தலைமையில் மாநில செயலாளர்கள் T. ஜெயக்குமார், K. பிரதாப் மாநில மாணவர் அணி செயலாளர் சீ.கவியரசன், மாநில ஐடி விங் தலைவர் P. நதீஷ்குமார், தேனி மாவட்ட மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி,  கம்பம் நகர செயலாளர் அஜித்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  ஜாதிவாரி சென்செஸ் கணக்கெடுப்பு என்பது சமத்துவ இந்தியாவை உருவாக்க தேவையான அடிப்படை புள்ளிவிபரம். மக்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வி சமூக நிலை, அரசில் பல வகுப்புக்களின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிபரங்கள் இல்லாமல் அரசமைப்பு சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றவே முடியாது.  அன்னிய அரசு கூட இப்புள்ளி விபரங்களின் அவசியத்தை உணர்ந்து கடந்த 1872 முதல் 1931 வரை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தி வந்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் மத்திய அரசு இப்புள்ளி விபரங்களை இதுவரை எடுக்கமல் இருப்பது ஓபிசி/டிஎன்டி மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். அரசு ஜாதிவாரி சென்செஸ் கண்ககெடுப்...

தேனி மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்

தேனி, மே.9- தேனி மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா முன்னிலையில் 9.5.2026 அன்று அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 47 பள்ளிகளில் (தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகா)  உள்ள 380 வாகனங்களில் 297 பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி (EmergencyExit Doori முதலுதவி பெட்டி, ஏறி இறங்கும் படிக்கட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை (Plot form), கண்காணிப்பு கேமரா உள்புறம் மற்றும் வெளிப்புறம், அவசர கால தொலைப்பேசி எண்கள் ஆகியன முறையாக உள்ளதா என்றும் மேலும் வேக கட்டுப்பாட்டுக்கருவி வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்...

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் முழு நிலவு சித்திரை திருவிழா : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

  தேனி, மே.2- தேனி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி அம்மன் கோவில் முழு நிலவு சித்திரை திருவிழா தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1.5.2026 நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர்.  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் பொங்கல் வைக்கப்பட்டு, பசுமையை குறிக்கும் வகையில் மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு சாத்தப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்கார பொருட்கள் கொண்டு சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கண்ணகி தேவியினை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து வசதிகள், இரண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பளியன்குடி வழியாக கோவிலுக்கு நடந்துவரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் கருதி வழி நெடுகிலும் ஆங்காங்கே ம...

தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

  தேனி, மே.1- தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தேனி அருகே உள்ள அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள டாக்டர் அவென்யூ பகுதியிலுள்ள மருதம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா 1.5.2026 அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்தியன் ரெட் கிராஸ் சேர்மன் என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வி.மகாராஜன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட செயலாளர் சுருளிவேல், பொருளாளர் முகமது ஷேக் இப்ராஹிம் , நிர்வாக குழு உறுப்பினர்கள் நாணயம் சிதம்பரநாதன், முகமது பாட்சா, ஜெகநாதன் உறுப்பினர்கள் சுந்தர், சுருளிப்பட்டி அன்புராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் முல்லை நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சாமி, ஹரி ஆசிரியர், சதீஸ், மகாராஜன், பத்மினி, பாலமுருகன், கனகராஜன், செல்வம்,, கவிஞர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வின் போது மருதம் பூங்கா சீரமைக்கப்பட்டு 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. .............................. நாகராஜ், தலைமை நிருபர்  

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில்; ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

தேனி, ஏப்.29- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 12-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துவதற்கான ஏலத்தை சதீஷ் என்பவர் ரூ.2 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து எந்திர ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு 29.4.2026 அன்று வீரபாண்டி கோவில் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் சக்தி, ராட்டினம் ஏலதாரர் சதீஷ், முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து உணவு கூடம் அமைக்க ஏலம் எடுத்த இடத்திலும் பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பூமி பூஜைக்கான ஏற்பாடுகளை ஏலதாரர் தரப்பபை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர். ............................. நாகராஜ், தலைமை நிருபர் 

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ரூ.2.44 கோடிக்கு போனது

தேனி, ஏப்.28- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான ஏலம் 4-வது முறையாக கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் சபர்மதி தலைமை தாங்கினார். ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபிதா, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் ஏலதாரர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.  4-வது முறையாக நடந்த இந்த மறுஏலத்தில் ராட்டினம் நடத்துவதற்கு ஏலத்தொகை ...

போடி நகரில் இறுதி கட்ட பிரசாரத்தை முடித்த திமுக வேட்பாளர் ஓபிஎஸ்

தேனி, ஏப்.21- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட சமுதாய தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் மற்றும் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்புக்கான் இறுதி கட்ட பிரசாரம் 21.4.2026 அன்று மாலையுடன் நிறைவு பெற்றது.  இந்த இறுதி கட்ட பிரசாரத்தினை திமுக வேட்பாளர் ஓபிஎஸ் அவர்கள் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடி நகரில் உள்ள பார்க் ஸ்டாப், வ.உ.சி சிலை,  தேவர் சிலை, கட்டபொம்மன் சிலை, அணைப்பிள்ளையார் கோவில், உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தின் போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், முன்னாள் எம்பி ரவிந்திரநாத், போடிநாயக்கனூர் நகர் கழக செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் நகர்மன்ற ...

மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை பெளர்ணமி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்: தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடந்தது

  தேனி, ஏப்.17- தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 1.5.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு. தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேஷன் சேருவாட் ஆகியோர் தலைமையில் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபூ மத்யூ, சப் கலெக்டர் அனுப்கார்க் ஆகியோர் முன்னிலையில் 17.4.2026 அன்று நடைபெற்றது. மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1.5.2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு எதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம். குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி. பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் ம...