தேனி, மே.1-
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தேனி அருகே உள்ள அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள டாக்டர் அவென்யூ பகுதியிலுள்ள மருதம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா 1.5.2026 அன்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு இந்தியன் ரெட் கிராஸ் சேர்மன் என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வி.மகாராஜன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட செயலாளர் சுருளிவேல், பொருளாளர் முகமது ஷேக் இப்ராஹிம் , நிர்வாக குழு உறுப்பினர்கள் நாணயம் சிதம்பரநாதன், முகமது பாட்சா, ஜெகநாதன் உறுப்பினர்கள் சுந்தர், சுருளிப்பட்டி அன்புராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் முல்லை நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சாமி, ஹரி ஆசிரியர், சதீஸ், மகாராஜன், பத்மினி, பாலமுருகன், கனகராஜன், செல்வம்,, கவிஞர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது மருதம் பூங்கா சீரமைக்கப்பட்டு 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
..............................
நாகராஜ், தலைமை நிருபர்


.jpg)


Comments