Skip to main content

Posts

தேனி அருகே நடந்த யுகாதி விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேனி, ஏப்.5- தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கம், தேனி மாவட்ட ரெட்டி நலச்சங்கம் சார்பில் யுகாதி விழா மற்றும் குடும்ப விழாவில் தேனி- பழனிசெட்டிபட்டி போடி விலக்கு அருகே அமைந்துள்ள கிருத்திக் கிராண்ட் ஹோட்டலில் 5.4.2026 அன்று நடைபெற்றது. விழாவிற்கு ரெட்டி நலச்சங்கம் மாநில தலைவர் ரவி ரெட்டி தலைமை தாங்கினார். தேனி மாவட்ட ரெட்டி நலச்சங்க தலைவர் டாக்டர் வி.ஆர்.ராஜன் முன்னிலை வகித்தார்.  விழாவிற்கு வந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் அருண் பாஸ்கர் வரவேற்றார். விழாவில் தமிழக முன்னாள் முதல்வர், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ரெட்டி நலச்சங்கத்தினர் சார்பில் முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்கள் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வ...

போடி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

தேனி, ஏப்.5- தேனி திமுக வடக்கு மாவட்டம்,  போடிநாயக்கனூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் போடி மனோ தேவ் மஹாலில்  5.4.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர்   தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், போடி திமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், போடி நகர திமுக செயலாளர் புருஷோத்தமன்,  தேனி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி உள்பட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  ............................. நாகராஜ், தலைமை நிருபர்  

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டாக்டர்.கதிர்காமு வேட்புமனு தாக்கல்

தேனி, ஏப்.4- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் அமமுக-வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார்.  இந்நிலையில் அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு அதிமுக, பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று 4.4.2026 அன்று பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரஜத்பீடன் அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தேனி அமமுக மாவட்ட செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி, தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் பழனியப்பன், தேனி நகர அமமுக செயலாளர் குரு கணேஷ், தேனி நகர பாஜக தலைவர் ரவிக்குமார் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  .......................... நாகராஜ், தலைமை நிருபர்  

போடி- மதுரை இடையே தினசரி காலை, மாலை புதிய ரயில் சேவை வலியுறுத்தி மே 12-ல் ஆர்ப்பாட்டம்: திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

  தேனி, ஏப்.2- திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போடி சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் 1.4.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் போராட்டக்குழு செயலாளர்கள் மெல்வின், அந்தோனி பிரான்சிஸ், ஜான்சன், மகாராஜன், துணைத்தலைவர்கள் ஆரோக்கியராஜ், துடிவீரன், முருகேசன், போடி நகர செயலாளர் அரிகரன், செந்தில்குமார், தங்கம், ஆண்டிப்பட்டி வட்டார தலைவர் இளங்கோ, செயலாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தேனி நகர்  செயலாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- போடியில் இருந்து தினசரி காலை 7 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு போடிக்கும் புதிய ரயில் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் மே.12-ந் தேதி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. போராட்டக்குழு சார்பில் டெல்லி சென்று ரயில்வே அமைச்சரிடம், திண்டுக்கல் சபரி...

தேனியில் வாக்காளர்கள் இடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி: மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தொடங்கி வைத்தார்.

தேனி, ஏப்.2- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேனி-அல்லிநகரம் நகராட்சியில் வாக்காளர்களிடையே 100 சதவிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் 1.4.2026 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற 2026 பொதுத்தேர்தல் முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 198ஆண்டிபட்டி, 199.பெரியகுளம் (தனி), 200.போடிநாயக்கனூர் மற்றும் 201கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகின்ற 23.4.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணிகள், கையெழுத்து இயக்கம், சுவரொட்டி விளம்பரம் துண்டுப்பிரசுரம் வழங்குதல், ரங்கோலி நடைபயண பேரணி மனித சங்கிலி, தெரு நாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வுப் பணிகள் அனைத்து சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, முதன் முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், ...

தேனியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேனி, ஏப்.1- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டாக்டர்.கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  தேனியில் உள்ள அம்பி வெங்கடசாமி திருமண மண்டபத்தில் 1.4.2026 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை தாங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன், தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் பழனியப்பன், தேனி நகர அதிமுக துணை செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் செல்லமுத்து ஜெயக்குமார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும்  அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு அவர்களை அறிமுகம் செய்து வைத்து...

தேனி பா.ஜ.க அலுவலகத்தில்: அமமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

தேனி, மார்ச்.31- தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் டாக்டர்.கதிர்காமு, அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் வி.டி. நாராயணசாமி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் லோகிராஜன், கம்பம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.கே ஜக்கையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி மாவட்ட பாஜக  அலுவலகத்தில் 31.3.2026 அன்று நடைபெற்றது. இந்த அறிமுக கூட்டத்திற்கு தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் தலைமை தாங்கினார். தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், அமமுக மாவட்ட செயலாளர் காசிமாயன் மற்றும் பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், பி.சி.பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது ஒவ்வொரு தொகுதி வாரியாக பாஜக நிர்வாகிகளுக்கு அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள...

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

தேனி, மார்ச்.24- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி உழவர் சந்தையில் இன்று (24.03.2026) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சிற்பக் கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 199.பெரியகுளம் (தனி), 198.ஆண்டிபட்டி, 200.போடிநாயக்கனூர் மற்றும் 201.கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 23.4.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து இருசக்கர வாகன பேரணிகள், கையெழுத்து இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப்பிரசுரம் வழங்குதல், ரங்கோலி, நடைபயண பேரணி, மனித சங்கிலி, தெரு நாடகம், விளம்பர பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வுப் பணிகள் அனைத்து சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி...

தேனியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 35-வது ஷோரூம் திறப்பு விழா : திரைப்பட நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார்

தேனி, மார்ச்.16- உலகளவில் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 35-வது தேனி புதிய ஷோரூம் திறப்பு விழா 16.3.2026 அன்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர்), சுதிர் அகமது (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர்), அமீர் பாபு (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர்), நௌசாத் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர்), நந்த லால் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தேனி கிளை துணை தலைவர் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம். வைரம் மற்றும் வெள்ளி, கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 425-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள...

மதுரை-திருநகர், சொர்ணம் காலனி பகுதியில் குண்டும் குழியுமான புழுதி சாலையால் பொதுமக்கள் அவதி: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மதுரை, மார்ச்.13- மதுரை மாநகராட்சி, திருநகர் சொர்ணம் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடபடாததால் அப்பகுதி புழுதி களமாக காட்சியளிப்பதுடன் குண்டும், குழியுமான சாலையாக அப்பகுதி மாறிவிட்டது.  இதனால் அப்பகுதி மக்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது. இதில் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் சிறு சிறு விபத்துக்கள் கூட ஏற்பட்டு விடுகிறது.  எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை சீரான முறையில் மூடி சாலைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ............................. நாகராஜ், தலைமை நிருபர்