Skip to main content

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

தேனி, மார்ச்.24-

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி உழவர் சந்தையில் இன்று (24.03.2026) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சிற்பக் கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 199.பெரியகுளம் (தனி), 198.ஆண்டிபட்டி, 200.போடிநாயக்கனூர் மற்றும் 201.கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 23.4.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து இருசக்கர வாகன பேரணிகள், கையெழுத்து இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப்பிரசுரம் வழங்குதல், ரங்கோலி, நடைபயண பேரணி, மனித சங்கிலி, தெரு நாடகம், விளம்பர பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வுப் பணிகள் அனைத்து சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்றைய தினம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் தேனி-அல்லிநகரம் நகராட்சி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு 100% வாக்களிப்போம். எனது வாக்கு எனது உரிமை எனது வாக்கு விற்பனைக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட வாசகங்களால் அமைக்கப்பட்ட சிற்பக் கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை உழவர் சந்தையில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, வணிக நிறுவனங்கள் மற்றும் ஆட்டோக்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, இணை இயக்குநர் (வேளாண்மை) சாந்தாமணி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) நிர்மலா, தேனி தாசில்தார் சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
...............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments