தேனி, நவ.23- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 23.11.2024 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தேனி ஊராட்சி ஒன்றியம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அதுபோல கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி மாரிமுத்து தலைமையில், ஊராட்சி செயலாளர் வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்றது. நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானமணி பரமசிவம் தலைமையில், ஊராட்சி செயலாளர் சுருளி முன்னிலையில் நடைபெற்றது. ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில், ஊராட்சி செயலாளர் ரகுநாத் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அதுபோல காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ரம...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,