Skip to main content

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டம் நடத்த கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அனுமதி கோரி போலீசாரிடம் மனு


தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள நகராட்சி பகுதி 5 சுகாதார மண்டலங்களாக பிரிக்கப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் நகராட்சியில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர்கள் பெரும்பாலானோர் ஓய்வு பெற்ற காரணத்தினால் தனியார் நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் தனியார் குப்பைகள் சேகரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக திறமையின்மையால் தேனி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு குப்பைகளம் போல் காட்சியளிப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் தேனி போலீஸ் நிலையத்தில் போராட்ட நடத்த அனுமதி கோரி மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் தேனி அலங்காரம் நகராட்சி பகுதியில் துப்புரவு தூய்மை பணிகள் மிகவும் தெய்வாக இருப்பதாலும், இந்த குறைகள் பல மாதங்களாக இருப்பதாலும், நகராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாததாலும், தேனி நகராட்சி பகுதி முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது. 
இதனை கண்டித்து 20.11.2024 அன்று காலை 11 மணி அளவில் நகராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு பொதுமக்கள் 50 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு குப்பை கொட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதால் இந்த போராட்டத்திற்கு அனுமதி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments