தேனி, செப்.30- தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாசங்கமி-24 நுண்கலை விழா 30.9.2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ் பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு வரவேற்றார். கல்லூரி இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா, அகடமிக் டீன் முனைவர் கோமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் நுண்கலை விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வபிரியா நுண்கலை விழா பற்றிய அறிக்கையை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில், அனைவரும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும். இன்று நீங்கள் செய்யும் நுட்பமான முயற்சிகள் தான் உங்கள் எதிர்கால வெற்றியின் அடிப்படையாக இருக்கும். எதிர்கொள்ளும் சவால்கள், தடைகள் உங்களை வலுப்படுத்து...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,