இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஜூன் 28-ந் தேதி ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம்: வார வழிபாட்டு நிகழ்வில் முடிவு
தேனி, ஜூன்.7-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் வார வழிபாட்டு நிகழ்ச்சி 7.6.2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி தேனி நகர தலைவர் சிவராம் தலைமை தாங்கினார். தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வார வழிபாட்டை மேற்கொண்டதுடன், சமூக மற்றும் தேசிய நலன் சார்ந்த பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் – 1
வருகின்ற 28.6.2026 அன்று இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஒருநாள் பண்பு பயிற்சி முகாம் நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 2
தேனி அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தேனி நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிநீர் வழங்கலை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் – 3
இந்தியாவின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம், தேசிய பாதுகாப்பு, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சாதனைகளைப் பாராட்டி, அவருக்கு நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
....................................
நாகராஜ், தலைமை நிருபர்
செல்: 9842145271



Comments