தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாக பிரச்சனை: இருதரப்பினர் இடையே அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தேனி, ஜூன்.4-
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளையின் கீழ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் நிர்வாக இயக்குனராக செல்வமனோகரன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 17.3.2021 அன்று மதுரை சிஇஓஏ எஜுகேஷனல் சொசைட்டி நிர்வாக இயக்குனர் தனியார் பள்ளி கல்வித்துறையின் அனுமதி இன்றி பதிவு செய்யப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தரமான கல்விக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவது குறித்தும் சில நிபந்தனைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளை தீர்மானத்தின் படி சென்னை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அலுவலக உத்தரவின் படி மதுரை சிஇஓஏ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக பாக்கியநாதன் என்பவரை செல்வமனோகரன் கடந்த 26.3.2021 ஆண்டு நியமித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பள்ளியின் தாளாளராக இருந்து வந்த பாக்கியநாதன் என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் கடந்த 26.3.2025 அன்று அவரை தாளாளர் பொறுப்பில் இருந்து நீக்கியும் பதிவு செய்யப்படாத புரிந்துணர்வ ஒப்பந்தத்தை பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளையின் செயலாளர் செல்வமனோகரன் ரத்து செய்துவிட்டார்.
இதற்கிடையே கல்வித்துறை ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளையின் கீழ் மதுரை சிஇஓஏ பெயரில் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாகிறது. இந்த பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளையின் உறுப்பினர்களாக செல்வ மனோகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர். ஆனால் மதுரை சேர்ந்த சிஇஓஏ எஜிகேஷனல் சொசைட்டி என்ற பெயரில் உள்ள சங்க உறுப்பினர்கள் எவரும் இல்லை. அதுபோல பள்ளியின் இடம், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் குத்தகை அனைத்தும் பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளை பெயரில் தான் உள்ளது.
இந்நிலையில் பள்ளியின் தொடர் அங்கீகாரம் கடந்த 31.5.2024 அன்றே முடிவற்றுள்ளது. அதன் பின்னர் தொடர் அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை. இதுகுறித்து கல்வித்துறையின் சார்பில் 3 கடிதங்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் பதிவு செய்யப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் வருகின்ற 2033 வரை பள்ளியானது எங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக மதுரையை சேர்ந்த சிஇஓஏ எஜுகேஷனல் சொசைட்டி தலைவர் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் பள்ளி செயல்படுவதற்கான ஆவணங்கள் எதுவும் அவரால் தாக்கல் செய்யப்படவில்லை.
அதுபோல பள்ளியில் முதல்வர் பொறுப்பில் யார் உள்ளனர் என்ற விவரமும் தெளிவாக இல்லை. வாரம் ஒருவர் பள்ளி முதல்வர் எனக் கூறி வருகிறார். இந்த பள்ளியில் சுமார் 550 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பெனடிக்ட் மிஷின் அறக்கட்டளையின் தலைவர் செல்வ மனோகரன் பள்ளியின் தாளாளராக செயல்படவும் தொடர் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு அங்கீகரிக்க வேண்டி கருத்துரு சமர்ப்பித்துள்ளதாலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தினை நீக்கும் பொருட்டு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகள் 2023-ன் படி பழனிசெட்டிபட்டி பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளையின் கீழ் பள்ளி செயல்பட ஆவண செய்யுமாறு பள்ளி கல்வித்தறையின் (தனியார் பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள பரிந்துரை கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் 4.6.2026 அன்று 2026- 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த பள்ளி வகுப்பு தொடக்க நாளிலே பெனடிக்ட் மிஷின் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த பள்ளி தற்போது பள்ளிக்கான அங்கீகாரம் கொடுக்கப்பட்ட கட்டிடத்தில் செயல்பட வில்லை. இந்த பள்ளிக்கான கட்டிடம் இந்த வளாகத்தின் வடக்கு பகுதியில் உள்ளது. ஆனால் திலகாடெரன்சிக்கு சொந்தமான தெற்கு பகுதி வளாக கட்டிடத்தில் பள்ளி வகுப்புகள் நடத்தக்கூடாது. ஏனென்றால் இந்த இடம் திலகாடெரன்சி என்பவருக்கு சொந்தமான இடம். அதனால் தற்போது உள்ள தெற்கு பகுதியில் திலகாடெரன்சி நீதிமன்ற நிரந்தர தடை உத்தரவு பெற்றுள்ள கட்டிடத்தில் மாணவர்களை அமர வைக்க கூடாது என்று அவர் போலீசார் அனுமதி பெற்று தனது உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார்.
இதனால் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் இடையே திடீர் குழப்பம் ஏற்பட்டது. இதன் பின்னர் இந்த பள்ளிக்கான அங்கீகாரம் பெறப்பட்ட வடக்கு பகுதியில் உள்ள கட்டிட வளாக பகுதிக்கு மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் சென்றனர்.
இதற்கிடையே பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளை செயலாளர் செல்வ மனோகரன் தரப்பினர், தற்போது பள்ளி செயல்பட திட்டமிடப்பட்டிருந்த கட்டிடத்திற்கான இடத்தை சேர்ந்த திலகாடெரன்சி, மதுரையை சேர்ந்த சிஇஓஏ எஜுகேஷனல் சொசைட்டியால் பள்ளியில் பணியமர்த்தப்பட்டுள்ள நிர்வாகிகள் ஆகிய இருதரப்பினர் இடையே மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் திலகா டெரன்சி தரப்பில் நீதிமன்ற நிரந்தர தடை உத்தரவு பெற்றுள்ள கட்டிடத்திற்கு பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம், கட்டிட அனுமதி, கட்டிட உறுதிச் சான்று, கட்டிட உரிமம், சுகாதார சான்று, தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று, முறையான மின் இணைப்பு போன்றவை எதுவுமே இல்லாத இடத்தில் பள்ளி எப்படி செயல்பட அனுமதிக்க முடியும். எனவே பள்ளி நடத்த அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் தான் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று திலகாடெரன்சி கூறினார். இதில் திலகாடெரன்சி கூறுவது போல் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட வடக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் இன்று போல் பள்ளிகள் தொடர்ந்து செயல்படட்டும் என்ற முடிவினை தற்காலிகமாக எடுத்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில் செல்வ மனோகரன் தரப்பில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம். முத்துராமலிங்கம், தற்போதைய பள்ளி நிர்வாக முதல்வர், அலுவலர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதற்கிடையே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கராஜா தலைமையில் கட்சியினர் அங்கீகாரம் இல்லாத இடத்தில் பள்ளி செயல்படுவதை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
...............................
நாகராஜ், தலைமை நிருபர்







Comments