Skip to main content

தேனி நகரில் சுகாதாரத்திற்கு ஏங்கும் பொதுமக்கள் : பெரியகுளம் எம்.எல்.ஏ-விடம் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் கோரிக்கை மனு

தேனி, மே.19-

தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து சந்தன மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ-விடம், கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, 

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக நான் சேவை செய்து வருகிறேன். தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் சுதந்திரப் பணிகளை மேற்கொள்ள 6 வார்டுகளுக்கு 1 டிவிசன் என்ற முறையில் 5 டிவிசன்கள் உள்ளன. 1 டிவிசனுக்கு  22 முதல் 35 சுகாதார பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் 1 டிவிஷனுக்கு 7 முதல் 10 பேர்கள் மட்டுமே தூய்மை பணிகளை செய்கின்றனர். இதனால் தூய்மை பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெறுகிறது.

அதுபோல சாக்கடைகளில் சூப்பை கழிவுகள் தேங்கி கழிவு நீர் பொதுமக்கள் நடக்கும் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திக்கு ஆளாகின்றனர். மேலும் நான் நகர் மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு முறை கூட சாக்கடை (ட்ரைனேஜ்) தூர்வாரவில்லை. அல்லிநகரம் மந்தைக்குளம் கண்மாயில் 5-வது வார்டில் உள்ள மச்சால் 6 குறுக்கு தெருக்களில் உள்ள சூப்பைகள் கலக்கின்றன. அதையும்  2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே குப்பைகள் அதற்றப்படுகிறது. 

நான் பலமுறை நகர்மன்ற கூட்டத்தில் மனு கொடுத்துள்ளேன். எனது தலைமையில் நகராட்சி வளாகத்தில் முறையாக குப்பை கொட்டும் ஆர்ப்பாட்டமும் செய்துள்ளேன். அதுபோல பல்வேறு கட்சிகள் மூலமும் நகராட்சியில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றுள்ளது. மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்துள்ளேன். தேனிக்கு வருகை புரிந்த சட்டமன்ற ஆய்வு குழுவிடமும் மனு கொடுத்துள்ளேன். இதுவரை முறையான நடவடிக்கைகள் இல்லை. 

அதுபோல தேனி புதிய பேருந்து நிலையத்தில் (கர்னல் ஜான் பென்னி குவிக் பேருந்து நிலையம்) பேருந்துகள் உள்ளே நுழையும் வழியில் உள்ள கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வருகிறது. சிறுநீர் வாடையால் பயணிகள் மூச்சு விட முடியாமல் மூக்கை பிடித்து செல்லும் அவலம் ஏற்படுதிறது. இதுவரை நான் அளித்த எத்த மனுவிற்க்கும் பதில் இல்லை. எனவே தாங்கள் தயவு கூர்ந்து மேற்கூறியவற்றின் உண்மை நிலையை அறிந்து பொதுமக்களுக்கு நன்மை செய்திட வழிவகுக்குமாறு நகர்மன்ற உறுப்பினராக உள்ள எனது மனுவிற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

..................................

நாகராஜ், தலைமை நிருபர்

Comments