Skip to main content

தேனி மாவட்டத்தில் நடந்த 77-வது குடியரசு தின விழாவில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

தேனி, ஜன.26-
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.1.2026) நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டு, காவல்துறை படைப்பிரிவுகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் 80 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தன்னார்வ நிறுவனங்களுக்கு கேடயங்களையும் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, சிறப்பாகப் பணியாற்றி 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்துறை பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாகப் பணிபுரிந்த 6 மருத்துவர்களுக்கும். 3 சிறந்த சமூகநீதி விடுதிக் காப்பாளர்களுக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் 100% தேர்ச்சி அளித்த 18 பள்ளி ஆசிரியர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக பொறுப்பான்மை நிதியிலிருந்து நிதி பங்களிப்பு வழங்கிய வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும், தேவாரம் செட்டிகுளம் கண்மாயில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்ட பாராசூட் கல்பவ்ரிங்கா நிறுவனத்திற்கு (parachute kalpavriksha foundation) கேடயங்கள் மற்றும் நற்சான்றிதழ்களையும் காவல்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 177 அலுவலர்கள் பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

இதனை அடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பயனாளிகளுக்கு ரூ.1,04245 மதிப்பிலான ஸ்மார்ட் போன் மற்றும் தையல் இயந்திரங்களையும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.86,900 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ. 62,704 மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் மற்றும் தேய்ப்புப் பெட்டிகளையும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பயனாளிக்கு ரூ.12.00.000 மானியத்தில் குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகணம் பெறுவதற்கான ஆணையினையும், விபத்து நிவாரணமாக ஒரு நபருக்கு ரூ.2,00,000 மற்றும் 5 பயனாளிகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளையும் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.1,00,000. மதிப்பிலான கணவு இல்லத்திற்கான சாவிகளையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 3 பயனாளிகளுக்கு சுய தொழில் மானியமாக ரூ.6,00,000/-ம், தோட்டக்கலைத்துறை வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.5.26,000 மதிப்பீட்டில் பசுமைக்குடில் ரூ.50,000 மதிப்பீட்டில் வெங்காய சேமிப்பு கிட்டங்கி அமைப்பதற்கான ஆணைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 20 மகளிர் உதவிக்குழுக்களுக்கு ரூ.3,600,000. தொழில் கடனுதவி பெறுவதற்கான ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் on பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையான அட்டைகளையும் என மொத்தம் 80 பயனாளிகளுக்கு ரூ.1,19,90,300 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இதன்பின்னர் விழாவின் போது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெரியகுளம், அரசு மேல்நிலைப்பள்ளி லெட்சுமிபுரம், நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேனி, TMHNU மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முத்துத்தேவன்பட்டி மற்றும் தேனி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட சமூகநீதி விடுதி மாணவிகள் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தமிழாசி, பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) பஞ்சாபிகேசன், வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி, தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) கவிதா. முதன்மைக கல்வி அலுவலர் நாகேந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யதுமுகமது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments