தேனி நகர மக்களின் கனவு நினைவானது; மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படகு சவாரி திட்டத்திற்கான பூஜை:
தேனி, டிச.26- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் படகுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பல ஆண்டுகளாக வரப்பெற்றதை தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்களால் ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 26.12.2025 அன்று மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளுக்கான பூஜையை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வ...