தேனி, டிச.22-
தேனியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கத்தின் 3-ம் ஆண்டு முப்பெரும் விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் 21.12.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்க தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் மாரீஸ்வரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் ஆலோசகர் நாகராஜ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் சார்பில் கண்ணன், பசுமை இயக்கம் சார்பில் வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், ஆன்மீக சொற்பொழிவாளர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, 2024 - 2025ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கி, ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினர்.
..........................
நாகராஜ், தலைமை நிருபர்



Comments