தேனியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா: ரூ.6.31 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்
தேனி, நவ.3-
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 3.12.2025 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,31,674 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலை
இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்
அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஊன்றுகோல் சக்கர நாற்காலி மூன்று வாகனம், ஸ்மாட் போன்கள் டெஸ்சி பிளேயர், காதொலி கருவி, பேட்டரி வீல் சேர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி. தேனி மாவட்டத்தில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி விளையாட்டு பிஸியோதெரபி பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி வழங்குவதற்காக 4 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் வயதிற்கு மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடையவர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் மற்றும் பகல்நேரக் காப்பகம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் எவ்வித சிரமமின்றி தங்கள் வாழ்வை சுயமாக நடத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் அவர்கள் வாழ்விலும் முன்கோற்றம் காண முடியும் அதற்கு குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளிடம் காணப்படும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக பல்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்களை மாநில அளவில் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க செய்ய முடியும். மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தில் அரசு சாரா நிறுவனங்களின் (NGO) பங்களிப்பும் முக்கியமாக உள்ளது.
அரசின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளை விரைவில் சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவே அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,600 மதிப்பிலான பேட்டரி வீல்சேர்களையும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,89,000 மதிப்பிலான ஸ்மார்ட் போன்களையும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.63.500 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,20010 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,000-மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும்,. 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.070- மதிப்பிலான ஊன்றுகோல்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4624 மதிப்பிலான பிரெய்லி கை கடிகாரம் மற்றும் மடக்கு குச்சிகள் என மொத்தம் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,31,674 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
அதன் பின்னர் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற 31 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் பரிசாக ரூ.1000, இண்டாம் பரிசாக ரூ.500, மூன்றாம் பரிசாக ரூ.250 என பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் காமாட்சி, அரசு அலுவலர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகள் சங்க மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
............................
நாகராஜ், தலைமை நிருபர்






Comments