Skip to main content

தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு பகுதியில் புதிய மின் மாற்றி திறப்பு : தேனி வடக்கு நகர திமுக பொறுப்பாளர், கவுன்சிலர் பாலமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


தேனி, டிச.13-

தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு பகுதியில் மின் அழுத்த குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்வதற்கு 5-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவினை பரிசீலனை செய்த மின்வாரியத்துறை புதிய மின்மாற்றியை மந்தைகுளம் கண்மாய் கிழக்குக்கரை பகுதியில் அமைத்தது. 


இதனைத்தொடர்ந்து இந்த புதிய மின் மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக 13.12.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு 5-வது கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் தலைமை தாங்கினார் தேனி மின் பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) முருகேஸ்பதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் (வடக்கு) பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்த புதிய மின்மாற்றியை தேனி வடக்கு திமுக பொறுப்பாளர் கவுன்சிலர் சூர்யா பாலமுருகன் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார அலுவலர் ஜெயராமன், ஊர் பிரமுகர்கள் துரைராஜ், சாதிக், ராஜாராம், பாலகுரு, ஐயப்பன் உள்பட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

நாகராஜ், செய்தி ஆசிரியர் 
..........................



Comments