கோவை, அவினாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் 31.8.2024 அன்று நடிகர் கார்த்தி நடிப்பில், 96 பட இயக்குனர் எஸ்.பிரேம் குமார் இயக்கத்தில் வருகின்ற செப்டம்பர் 27-ம் தேதி திரையில் வெளிவர இருக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தில் யாரோ, இவன் யாரோ என்ற பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். கமல்ஹாசன் பாடல் பாடியதை ஒலிப்பதிவு போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இசை நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், சூலூர் அருகே உள்ள காசிகவுண்டர்புதூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி இல்லாத ஊரில் படித்து முன்னேறியவன். நான். 7 வருடம் படிக்க எனக்கு, 7 ஆயிரம் ரூபாய் தான் செலவு ஆனது. சினிமா நடிகர் என்பதால் எனக்கு யாரும் பெண் தரவில்லை. புஞ்சை புளியம...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,