சென்னை கொட்டிவாக்கத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கமிட்டி தென் சென்னை விளையாட்டு துறை மாவட்ட தலைவருக்கு பாராட்டு விழா
சென்னை ECR பகுதி கொட்டிவாக்கத்தில் 25.8.2024 அன்று மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் தென் சென்னை விளையாட்டு துறை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட வசிம் மீர் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மண்டல குழு தலைவர் கோசல்ராமன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் மயிலை நந்தகுமார், மாவட்ட துணை தலைவர் PL. கதிரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது ஏழை-எளிய மக்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments