தேனி, ஜூலை.15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை 15.7.2025 அன்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டம். பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,34 ஆகிய வார்டு பகுதிகளுக்கு கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். இதேபோன்று கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,3 ஆகிய வார்டு பகுதிகளுக்கு உலகத்தேவர் தெரு சமுதாய கூடத்திலும், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் 1 முதல் 7 வார்டுகளுக்கு பி.ரெங்கநாதபுரம் பகுதி சமுதாய கூடத்திலும், ஆண்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட அனுப்பப்பட்டி, போடிதாசன்பட்டி, ஏத்தக்கோவில் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டி சமுதாய கூடத்திலும், க.மயிலாடும்பாறை ஊராட்சியில் கடமலைக்குண்டு பத்ரகாளியம்மன் மண்டபத்திலும் நடைபெற்றது. இந்த முகாம்களில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ....
Publisher of the Website : Nagaraj Kamudurai