தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.ஆர்.ராஜன் பிறந்த நாள் விழா: தேனி எம்.பி., தங்க தமிழ்செல்வன், தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்
தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.வி.ஆர். ராஜன் பிறந்தநாள் விழா, தேனி பென்னிகுவிக் லயன்ஸ் கிளப் அறிமுக விழா, வைகை ஸ்கேன், திரவியம் கல்வியியல் கல்லூரி, தேனி வைகை அரிமா சங்கம் சார்பில் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 13.7.2025 அன்று லட்சுமிபுரம் ஸ்ரீ சீரடி அன்ன சாய்பாபா கோவில் வளாக பகுதியில் நடைபெற்றது.
விழாவிற்கு தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தலைமை தாங்கி டாக்டர் வி.ஆர்.ராஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மருத்துவ முகாம் மற்றும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.வி.ஆர்.ராஜன் வரவேற்றார்.
இந்நிகழ்வுகளில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, தேனி திமுக வடக்கு நகர செயலாளர் பாலமுருகன், வைரஸ் கேன் திரவியம் கல்லூரி தாளாளர் டாக்டர். பாண்டியராஜன், தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நிஷாந்த், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் தேனி செல்வக்குமார், முன்னாள் முதல்வரின் நேர்முக உதவியாளர் ராஜா அழகணன், இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் ராமராஜ், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் ராஜமோகன் பெஸ்ட் ரவி செல்வா கணேஷ் ஜெகதீஷ் லால் பகதூர் சாஸ்திரி, கணேஷ், விஷுவல் பிரபு, ரத்தினம் நகர் திமுக கிளைச் செயலாளர் ஸ்டாலின், நேசம் தொண்டு நிறுவனம் நிர்வாகி முருகன், தினகரன் நிருபர் சிக்கந்தர் அலி ஜின்னா, தினமலர் தங்கமணி, எவிடன்ஸ் இதழ் ஆசிரியர் முத்துகாமாட்சி, தேனி திமுக வடக்கு மாவட்ட அயலக அணி நிர்வாகிகள் முகமது ரபிக், பாசித் ரகுமான், மனோஜ்குமார், சிராஜ்தீன், கே.சி. கண்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், சாந்தகுமார் உள்பட திமுக நிர்வாகிகள் தொழிலதிபர்கள், மாவட்ட முக்கிய பிரமுகர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.வி.ஆர். ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விழாவின் போது தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் பிறந்தநாள் கொண்டாடிய டாக்டர்.வி.ஆர்.ராஜன் முன்னிலையில் விஜய் டி.வி., ஏர்டெல் சூப்பர் சிங்கர் விருது பெற்ற சிறுமி காயத்ரிக்கு தேனி மக்கள் விருதினையும், மாணவ, மாணவிகளுக்கு, ஏழை-எளிய மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
................................
நாகராஜ், செய்தி ஆசிரியர்
Comments