தேனி, ஜூலை.13-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தலைமை அலுவலகத்தில் வார வழிபாட்டு நிகழ்ச்சி 13.7.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். நகர அமைப்பாளர் எல்.ஆர். ஐயப்பன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன். இரவி கலந்து கொண்டு வழிகாட்டும் ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் முக்கிய தீர்மானக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன
தீர்மானம் (1):
வருகின்ற 20.7.2025 அன்று இந்து எழுச்சி முன்னணியின் ஆண்டு திட்டங்களில் ஒன்றாக, ஒருநாள் பண்பு பயிற்சி முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த முகாமின் நோக்கம் சங்க உறுப்பினர்களுக்குள் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பை வளர்ப்பதாகும். மாவட்ட அளவிலான தலைவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.
தீர்மானம் (2):
மதுரை மாநகராட்சி அலுவலங்களில் நடைபெற்ற சுமார் ₹92 கோடி மதிப்புள்ள ஊழலுக்கு இந்து எழுச்சி முன்னணி கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது.
பொதுமக்களின் வரி வசூலில் பெற்ற நிதிகளை, சில அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது சொந்த லாபங்களுக்காக தவறாக பயன்படுத்துவது முற்றிலும் நிராகரிக்கத்தக்கது.
மதுரை மாநகராட்சியில் நடைபெறும் ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தகச் செயல்கள் குறித்து முறையான, சார்பற்ற விசாரணை குழு உடனடியாக அமைக்க வேண்டியது அவசியம்.
ஊழலுக்கு உடன்பாடாக செயல்பட்ட அலுவலர்கள் சட்டப்படி பதவி நீக்கம் மற்றும் வழக்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும், மக்களின் நலனில் இடையூறு விளைவிக்கும் ஊழல் மூலமான திட்டங்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
ஊழல் குறித்து புகார் கொடுக்கும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பும் நியாயமும் வழங்கப்பட வேண்டிய தேவையையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments