தேனி, ஜூலை.8-
பாரதிய மஸ்தூர் சங்க தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனி அல்லிநகரம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயல் தலைவர் பாலன் தலைமை தாங்கினார்.
மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் பாஜக தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தின் போது தேனி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இதில் தேனி மாவட்ட தலைவராக அய்யப்பராஜ், மாவட்ட செயலாளராக பாலமுரளி, மாவட்ட பொருளாளராக முருகானந்தன் மற்றும் மாவட்ட செயல் தலைவராக பாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் இந்திய அளவில் 13 தொழிற்சங்கங்கள் சார்பில் 9-ந் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கம் பங்கேற்காது என்று முடிவு செய்யப்பட்டது. அதுபோல டாஸ்மாக் தொழிலாளர்கள் பணிச்சுமை நெருக்கடியை தவிர்க்க தமிழசு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
..........................
நாகராஜ், செய்தி ஆசிரியர்
Comments