Skip to main content

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

 

சென்னை, ஜூலை.4-
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா சென்னை சர்.பி.டி தியாகராய அரங்கில் 3.7.2025 அன்று நடைபெற்றது. 
விழாவிற்கு சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் க.குமார் தலைமை தாங்கினார்.
விழாவில் எழுச்சி தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் M.P., வாழும் ஆழ்வார் எஸ் .ஜெகத்ரட்சகன் M.P., பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் டாக்டர் பி.ஆனந்த், விருகை வி.என். கண்ணன், மணிமாறன் இயக்குனர்  கனரா பேங்க், வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆம்ஸ்ட்ராங் சகோதரர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் நடைபெறுவது போல் மூத்த பத்திரிகையாளர்களுக்கு பொற்கிழி, ஏழைப்பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி  மடிக்கணினிகள் மற்றும் இருசக்கர சைக்கிள், மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவின் போது சங்கத்தின் சார்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் வி.சி.க தலைவர் தொல்.திருமா அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன் வரவேற்கிறேன் என்று அவர் கூறினார். 
இதனைத்தொடர்ந்து விழாவில் அவர் அரசு அடையாள அட்டை வழங்குவது குறித்து தமிழக முதல்வர் அவர்களிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பேன் என்று உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
...............................
நாகராஜ், செய்தி ஆசிரியர் 




Comments