தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் 6.5.2023 அன்று மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் சுயமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள், குடிநீர் வினியோகம், சுத்தம் சுகாதாரம் தொடர்பான பணிகளை தானே நேரடியாகச் சென்று ஆய்வு செய்து குறை நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. அவற்றை கண்காணித்து தடுத்து நிறுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் விடுதலின்றி கலந்து கொண்டு தங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அருகாமையில் குட்கா மற்றும் இதர போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து மாணவர் நலம் பேணும் பொருட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனா போன்ற கால கட்டத்தில் சுகாதாரத்துறையுடன் இணைந்து தக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 15-வது நிதிக்குழ...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,