தேனி, நவ.28- தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு தேனி அருகே உள்ள வீரபாண்டியில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி ஏற்பாட்டில் தேனியில் முதன்முறையாக முன்னிட்டு பொது மக்களை கவரும் வகையில் விழிப்புணர்வு குதிரை பேரணி 27.11.2025 அன்று நடைபெற்றது. இந்த பேரணியை வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது வீரபாண்டி பேரூராட்சி திமுக செயலாளர் செல்வராஜ், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இந்த பேரணியானது முத்துதேவன்பட்டி, பழனிசெட்டிபட்டி, தேனி பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு என சுமார் 30 கிலோ மீட்டருக்கு மேல் குதிரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த குதிரை பேரணியை பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். .......................... நாகராஜ், செய்தி ஆசிரியர்
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,