தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் மீது அவதூறு செய்தி பரப்பிய பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்.பி.-யிடம் சேர்மன் புகார் மனு
தேனி, நவ.14-
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் வக்கீல் மிதுன் சக்கரவர்த்தி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் 11.11.2025 ஆம் தேதியன்று புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ள புகார் குறித்து பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
அந்த புகார் மனுவில், நான் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பேரூராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது வரை பொதுமக்கள் நலனுக்காக பணிகள் செய்து வருகிறேன். இந்நிலையில் ஒரு வார பத்திரிக்கை செய்தியில் நான் வைக்கிறது தான் சட்டம் என் வீட்டிற்கு தான் திட்டம் மீண்டும் சர்ச்சை வளையத்தில் பி.சி.பட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி என்ற தலைப்பில் எனது புகைப்படத்தினை அச்சிட்டு பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா தெருவில் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து ரோட்டில் பாதி ஆக்கிரமிச்சிருக்காங்க. இதிலே பத்துக்கு மேலே வாடகைக்கு வீடு கட்டி விட்டு வசூல் பண்ணிக்கிட்டு இருக்காரு, அந்த வீடுகளுக்கு தெரு குழாயில் நேரடியாக இணைப்பு கொடுத்து 24 மணி நேரம் தண்ணீர் வர்ற மாதிரி ரெடி பன்னியிருக்காரு. இவர் கட்டியிருக்கிற வீட்டை யாரும் நெருங்க கூடாது என்பதற்காக ரோட்டையே 15 அடி ஆக்கிரமிப்பு செஞ்சிருக்காரு என குறிப்பிடப்பட்டு, அந்த வார பத்திரிக்கையில் எனது புகைப்படத்தை வைத்து. மேற்படி பத்திரிக்கை நிறுவனம் மற்றும் சில நபர்கள் தூண்டுதலால் பொய் செய்திகள் வெளியாகியுள்ளது.
என் மீதான புகார் குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேளுங்கள். அந்த வார பத்திரிக்கையினர் நேரில் வந்து விசாரணை நடத்துங்கள். கடந்த முறை மின்சார பிரச்சனை குறித்து இதுமாதிரி அந்த பத்திரிக்கை நிறுவனம் செய்தியை வெளியிட்டது. பொது குழாயில் அனைவரும் தண்ணீர் பிடிப்பார்கள். பொது குழாயிலிருந்து நான் எப்படி வீட்டிற்கு இணைப்பு கொடுக்க முடியும். பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் அதிகாரிகள் எப்படி எனக்கு விதிவிலக்கு அளிப்பார்கள். கோர்ட்டு உத்தரவு பேரூராட்சி தலைவரான எனக்கு வரவில்லை. பேரூராட்சி செயல் அதிகாரிக்கும் வரவில்லை. நாங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே வீடு குழாய் இணைப்பு வாங்கியுள்ளோம். எங்கள் வீடு தொடங்கிய பிறகுதான் தெருவிலுள்ள அனைத்து வீடுகளும், ஏன் தெருவே உருவாகியது என்ற விளக்கத்தினை அந்த பத்திரிக்கை நிருபரிடம் செல்போனில் கூறினேன்.
இவற்றில் நான் சொல்லாத வார்த்தைகளை சொன்னதாக தெரிவித்தும் அவதூறு மற்றும் பொய் செய்தி பதிப்பித்து மற்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த முயற்சிப்பதும், எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதும் போன்ற செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சலும், மேலும் எனது நற்பெயரை கலங்கப்படுத்தும் விதமாக உள்ளது.
எனவே, நான் சொல்லாத வார்த்தைகளை சொன்னதாக தெரிவித்தும் அவதூறு மற்றும் பொய் செய்தி வெளியிட்டும் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த முயற்சிப்பதும், எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதும் போன்ற செயல்கள் புரிந்த அந்த பத்திரிக்கை நிறுவனம் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பிய நபர்கள் மற்றும் அந்த பத்திரிக்கை நிருபர், பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் கடந்த 11.11.2025 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் என்னைப்பற்றி பொய் செய்திகளைக் கொண்டு அவதூறு பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத பத்திரிக்கைகள் என்ற பெயர் சொல்லிக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும், அரசு அலுவலர்களையும், பொய் செய்திகளை போட்டு அவதூறு பரப்பி மிரட்டி பணம் பறிக்கும் போக்கு தேனி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற செய்தியாளர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற பொய் செய்திகள் மாவட்ட கலெக்டர் அவர்கள் கவனத்திற்கு வரும் போது அதன் உண்மை தன்மை ஆராயாமல் அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள் உள்ள வாட்ஸ் குழுவில் பகிர்வது என்பது அவதூறு பரப்புவதற்கு மாவட்ட நிர்வாகமும் உடந்தையாவது போல் ஆகிறது. மாவட்ட கலெக்டர் அவர்கள் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள் நாங்கள். இருந்த போதும் மேற்சொன்ன பத்திரிக்கை அவதூறு செய்தியினை அவரே பொது வழியில் பகிர்ந்தது மிகந்த வருத்தத்தையும், மனவேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற அவதூறு செய்திகளை ஆராய்ந்து வெளியிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாக பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
..........................
நாகராஜ், செய்தி ஆசிரியர்



Comments