Skip to main content

தேனியில் 72-வது கூட்டுறவு வார விழா: ரூ11.16 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை 1,141 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் வழங்கினார்.

தேனி, நவ.20-

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (20.112025) கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ11.16 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை 1,141 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் வழங்கினார்கள்.

இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகள் தொழில்முனைவோர். பெண்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து, சமுதாய முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. நூற்றாண்டிற்கும் மேற்பட்ட கட்டமைப்பை கொண்ட கூட்டுறவுத் துறையில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும் பொருளாதார முன்னேற்ற வளர்ச்சிக்கும் கூட்டுறவுத்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மருத்தகம் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள்.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் இதர வங்கிகளுக்கு இடையேயான கடனுதவி வேறுபாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றம் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. எனவே கூட்டுறவு வங்கிகளில் புதிதாக கடன் துவங்குவது குறித்து. இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் அரசின் பல்வேறு கடன் திட்டங்கள், சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் கடன் உதவி பெற்று ஏராளமான பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாகி உள்ளார்கள். பொருளாதார வளர்ச்சியில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

நமது மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மிக சிறப்பாக செயலாற்றி வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் கூடுதலாக உறுப்பினர்களை இணைத்து சிறந்த முன்னேற்றம் காண வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார்.

இவ்விழாவின் போது பயிர்க்கடனாக 422 பயனாளிகளுக்கு ரூ5,98,45,480 கால்நடை பராமரிப்பு கடனாக 106 பயனாளிகளுக்கு ரூ 89,14,700/ மகளிர் சுய உதவி குழு கடனாக 579 பயனாளிகளுக்கு ரூ.4,01,72,000 டாம்கோ கடனாக 27 பயனாளிகளுக்கு ரூ.16,62,500, டாப்செட்கோ கடனாக 2 பயனாளிகளுக்கு ரூ.95,000/ மாற்றுத்திறனாளி கடனாக நபருக்கு ரூ.1,00,000/ சிறுவணிக கடனாக 3 பயனாளிகளுக்கு ரூ.1,25,000 வீட்டு அடமான கடனாக பயனாளிக்கு ரூ.7,00,000 என மொத்தம் 1141 பயனாளிகளுக்கு ரூ.11,16,14,680 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை மாவட்ட கலெக்டர்  தேனி பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தலா ரூ.25,935 மதிப்பிலான புல்நறுக்கும் கருவிகளை 30 விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதுபோல 2024-2025 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள், முதல்வர் மருந்தகம். மற்றும் தன்னார்வத்துடன் அதிக அளவில் பனை விதைகளை நடவு செய்த பனைமுருகன் ஆகியோருக்கு பாராட்டு கேடயங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் முதல்வர் மருந்தகம், தாயுமானவர் திட்டம் மற்றும் ஆவின் மீனவளத்துறை ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட கலெக்டர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் வாஞ்சிநாதன் கூட்டுறாவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நர்மதா, இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) இளங்கோ. பொது மேலாளர் (ஆவின்) ரமேஷ், துணைப்பதிவாளர் செல்வரா தேனி-அல்லிநகரம் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வம், திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
............................
நாகராஜ், தலைமை நிருபர் 




Comments