ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சி தான் இந்த வாக்காளர் பட்டியல் SIR: தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேட்டி
தேனி, நவ.7- தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியில், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா 7/11/2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., வருகின்ற நவம்பர் 11-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் வாக்காளர் பட்டியல் S.I.R திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்ற கேள்விக்கு, SIR-யை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து SIR-யை சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால் பீகாரில் நாம் தெளிவாக பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா...