தேனி, அக்.27-
தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு பகுதியில் வார்டு சபா சிறப்பு கூட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் 27.10.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கவுன்சிலர் கடவுள் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் கோபால் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகராட்சி ஊழியர்கள், வார்டு பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கருவேல்நாயக்கன்பட்டி தேவர் சிலை அருகே உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். கருவேல்நாயக்கன்பட்டிக்கு வடக்கு பகுதியில் இருந்து வரும் மெயின் அணுகு சாலையில் உள்ள சாக்கடை பாலத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதனால் சாலையில் உள்ள சாக்கடை பாலத்தை 25 அடி தூரம் வடக்கு பகுதிக்கு தள்ளி அமைக்க வேண்டும். அதுபோல கருவேல்நாயக்கன்பட்டி தேவர் சிலை அருகே சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
மந்தையம்மன் கோவிலில் இருந்து மேற்கு தெரு செல்லும் சிமெண்ட் சாலையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை உடனடியாக மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்பட 12 அடிப்படை கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
.............................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments