தேனி, அக்.12-
தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஸ்வகர்ம சுவாமி பட ஊர்வலம் தேனியில் 12.10.2025 அன்று நடைபெற்றது.
ஊர்வலத்திற்கு சிலமலையை சேர்ந்த சைவ சமய திருப்பணி செம்மல் பாண்டி நாட்டு கோச்செங்கணர் ஆன்மீக வள்ளலார் ஸ்ரீ எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பாலமுருகன், உதவி தலைவர் சொக்கர்ராஜா, வெளிச்சம் அறக்கட்டளை நாணயம் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ சுவாமிகள் தொடங்கி வைத்தார். ஊர்வலம் தேனி மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு பகுதியில் இருந்து தொடங்கி விழா நடைபெற்ற வசந்த மஹால் நிறைவடைந்தது.
இதனைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீ விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ விஸ்வகர்ம சமுதாய மக்கள் வாழ்ந்து வந்த விதம், செய்கின்ற வேலைகள் குறித்து விளக்கி பேசினார்.
இந்த கூட்டத்தில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் ராமராஜ், ஜெயந்தி விழாக்குழு தலைவர் நம்பியார் செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ஜெயராஜ், நகை வேலை வெளிச்சம் அறக்கட்டளை சிதம்பரநாதன் உள்பட ஜெயந்தி விழாக்குழு நிர்வாகிகள், தேனி மாவட்ட விஸ்வகர்ம மகாஜன சங்க நிர்வாகிகள் உள்பட தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த விஸ்வகர்ம மகாஜன சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் செல்வமுருகதாஸ் நன்றி கூறினார்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments