Skip to main content

தேனி மாவட்டத்தில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: ஜல்லிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்றார்

தேனி, அக்.11-

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 11.10.2025 அன்று நடைபெற்றது. இதில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில்,
கிராம சபை கூட்டத்தின் நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கிராமப்புறங்களை விரைவாக முன்னேற்றம் அடைய செய்யவும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கிராம சபை கூட்டத்தின் மூலம், கிராமப்புறத்திற்கு தேவையான குடிநீர், மயான வசதி உள்ளிட்ட பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கிராமப்புற மக்களின் நலனுக்காக நடத்தப்படும் இதுபோன்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வரவு, செலவு மற்றும் பணிகள் முன்னேற்ற அறிக்கை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணி முன்னேற்ற அறிக்கை தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, தாயுமானவர் திட்ட கணக்கெடுப்பு கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம். சபாசார் செயலி செயல்பாடுகள், பிராதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா (PMAGY) ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வேளாண்மைத் துறை சார்பில் உளுந்து மினிகிட் 1 நபருக்கும். தோட்டக்கலைத்துறை சார்பில் பழக்கன்றுகள் 1 நபருக்கும் மாவட்ட கலெக்டர்  வழங்கினார்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராம சபைக் கூட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு காணொளிகாட்சி வாயிலாக ஆற்றிய உரை எல்.இ.டி திரையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டதை மாவட்ட கலெக்டர்  பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், இணை இயக்குநர் (வேளாண்மை) சாந்தாமணி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) நிர்மலா, உதவி இயக்குநர்கள் முருகையா (ஊராட்சிகள்), அப்பாஸ் (நில அளவை), பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராகவன், ஊராட்சி செயலாளர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் உள்பட பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். 

அதுபோல தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மைதிலி பார்வையாளராக பங்கேற்றார். 
இதில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் ரதவேல் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 
இதேபோன்று நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிவலிங்கநாயக்கன்பட்டி சமுதாய கூடத்தில் ஊராட்சி செயலாளர் சுருளிவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 
காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் ஆண்டவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதுபோல கோவிந்தநகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சீலையம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
..........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments