தேனி வாரச்சந்தையில் நகராட்சியின் சார்பில் தற்காலிக கடைகள் அமைக்கும் திட்டம்: தடுத்து நிறுத்த கோரி இந்து எழுச்சி முன்னணியினர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு
தேனி, ஜன.13- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்து எழுச்சி முன்னணியினர் தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் தலைமை எழுத்தர் தியாகராஜன் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை 13.1.2025 அன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், தேனி வட்டம், தேனி நகர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் நிலத்தில், தேனி அல்லிநகரம் நகராட்சியின் சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. தற்போது, அந்த சந்தை பகுதியில் இயங்கி வந்த தினசரி காய்கறி கடைகள் இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டப்படும் பணிகள் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், அந்த கடைகளுக்கு மாற்றாக, கோவில் நிலத்தில் தற்காலிகமாக கடைகள் அமைக்க நகராட்சி முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. மேற்படி கோவில் நிலத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டால், பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் சிரமம் ஏற்படும், கோவில் நிலம...