மதுரையில், பண்டரிபுரம் பாண்டுரங்கனை 200 நாம சங்கீர்த்தன கலைஞர்கள் பூஜிக்கும் 22-ம்ஆண்டு பாகவத நாம சங்கீர்த்தன மேளா: விழாவில் பங்கேற்க சுவாமி ராமானந்த சரஸ்வதி அழைப்பு விடுத்துள்ளார்
மதுரை, ஜன.10-
மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி சாலையில் உள்ள சுவாமி ராமானந்தா சரஸ்வதி, ஸ்ரீசங்கர ராஜராஜேஸ்வரி பீடம் சார்பில் 22-ம் ஆண்டு பாகவத சங்கீர்த்தன மேளா,வரும், மே 28-ம் தேதி முதல் ஜூன் 1-ம்தேதி வரை, 5 நாட்கள் மதுரையில் பண்டரிபுரம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட பாண்டுரங்கனின் நாம சங்கீர்த்தன் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள், இதற்கான விழா ஏற்பாடுகளை செய்து வரும், மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடத்தின் ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியாதவது,
சென்னை பகவந் நாம பிரச்சார மண்டலி சபை , ஒவ்வொரு வருடமும் அயோத்தி, பத்ரிநாத் துவாரகா, பத்ராஜலம், உடுப்பி, இராமேஸ்வரம், காசி உட்பட பல்வேறு புண்ணிய தலத்தில் பாகவத நாம சங்கீர்த்தன மேளாவை நடத்தி பகவான் பாண்டுரங்கனின் சங்கீர்த்தனை நடத்தி நாடும் மக்களும் எல்லா நன்மையும் நோயின்றி வாழ வழிபாடு நடத்துவது வழக்கம் இது 20 வருடத்திற்கு மேல் நடைபெற்று வருகிறது.
இதேபோன்று இந்த ஆண்டு வருகிற மே 28-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி என 5 நாட்கள் மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடைபெறுகிறது என்றும் இந்த விழாவில் சண்டிஹோமம், 108 சுவாசினி பூஜை, மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் ருக்மணி திருக்கல்யாணம் ஆகியன சிறப்பாக நடைபெற உள்ளது. இதன் விசேஷமாக 1008 சாலக்கிராம பூஜை நடைபெற உள்ளது இதனை 100-க்கும் மேற்பட்ட நாமசங்கீர்த்தன. கலைஞர்கள் வேத விற்பன்னர்கள் இதில் கலந்து கொண்டு பாடுவது வழக்கம் , இதில் இந்தியா முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பாண்டுரங்கரின் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பண்டரிபுரம் பாண்டுரங்கனின் கோவில் போன்ற அலங்கார வடிவமைப்பில் அமைத்து அதில் சுவாமிகளை அலங்கரித்து பூஜைகள் செய்ய பண்டரிபுர கோவில் பண்டிதர்கள் வருகை தர உள்ளார்கள் என்றார். பண்டரிபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று பாண்டுரெங்களை பக்தர்கள் தரிசிக்கும் உணர்வை காண முடியும், இங்கு நடக்கும் பூஜைகள் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு சகல செளபாக்கியம், கிடைக்கும், விழா நடக்கும் நாட்களில் அன்னதானம் நடைபெறும் என்றார்.
விழா நிகழ்வில் பிலாஸ்பூர் சச்சிதானந்த ஸ்வாமிகள் வைஷாக் ராமானந்த பாரதிசுக்கள் மற்றும் பல ஜீயர் சுவாமிகள், ஆதீன கர்த்தர்கள் பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சிக்க ஏற்பாட்டினை சென்னை பசுவந் நாம பிரச்சார மண்டலி ஒருங்கிணைப்பாளர் கடலூர் கோபி பாகவதர், தலைவர் சுவாமிநாதன், செயலாளர் சங்கர், பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோருடன் மதுரை அனுவுத்தின் அனுக்கிரக நிறுவனர்.நெல்லை பாலு உடன் இருந்து செய்ய உள்ளனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
..........................
Comments