Skip to main content

Posts

Showing posts from August, 2025

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா: தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பேச்சாளர் பர்வீன் சுல்தானா பங்கேற்பு

தேனி, ஆக.28- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 16-வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா 28.8.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜன் தலைமை தாங்கினார்.  உபதலைவர் A.S.ஜீவகன், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், கல்லூரி செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் Dr.C.மதளைசுந்தரம் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொறியியல் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் பொழுதே தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து எதிர்காலத்தை தீர்மானிக்கும் குறிக்கோளுடன் சிறந்த ஒழுக்கம், கடின உழைப்புடன் தொடர் முயற்சி, பிற மொழியினை கற்றுக்கொள்ளுதல், மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வளர்ச்சி ஒன்றே நோக்கம் என்று பொறியியல் மாணவர்கள் செயல்பட வேண்டுமென்றும், கிராமப்புற மாணவர்களுக்கு ...

இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோலாகலமாக நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தேனி, ஆக.28- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனி நகர் மற்றும் தேனியை சுற்றி உள்ள பகுதிகளில் 3 அடி முதல் 10 அடி வரையிலான 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.  இதில் தலைமை விநாயகர் சிலை தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள எம்.ஆர் வல்கனைசிங் கடை முன்பு வைத்து கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராம்ராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இதனைத்தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் 28.8.2025 அன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராம்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஊர்வலத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ப...

தேனி அருகே கோடாங்கிபட்டி கிராமத்தில்;: விவசாய நிலங்கள் அருகே குவாரி அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: வலையபட்டி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, ஆக.19- தேனி மாவட்டம், போடி தாலுகா, கோடாங்கிபட்டி கிராமம், வலையபட்டியை சேர்ந்த தங்கதுரை மற்றும் கிராம மக்கள் சிலர் தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  எங்கள் ஊரில் பெரும்பாலானோர் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் மட்டுமே பிரதான தொழிலாக நடத்தி வருகின்றனர். எங்கள் ஊரில் பெரும்பான்மையானோருக்கு விவசாய நிலங்கள் அகமலை வனச்சரக பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. அதில் எங்கள் ஊர் மக்கள் விவசாயம் செய்தும், கால்நடைகளை மேய்த்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளத்தை சேர்ந்த ராமசுப்பு மகன் சீனிவாசன் என்பவர் எங்கள் ஊரை சுற்றி 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் முறைகேடாக உரிமை ஆவணங்களை ஏற்படுத்தியுள்ளார்.  அந்த நிலங்களில் ஒரு சில பகுதியில் கிராவல் மற்றும் உடைகல் குவாரியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் மக்கள் எதிர்ப்பையும் தாண்டி அமைத்து விட்டார். அந்த குவாரிக்கு சென்று வருவதற்கு எங்கள் ஊரில் அமைந்துள்ள மணல் நிறைந்த ஓடையில் குவாரி கற்களை எடுத்து செல்லும் வாகனங்கள் சென்று வருவ...

சின்னமனூர் கருங்கட்டான்குளம் பால் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்கள் பணத்தை திருப்பி தர இழுத்தடிப்பு: மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, ஆக.19- தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி, பழனிச்சாமி, அமானுல்லா, முனிராஜா, செல்லப்பாண்டி, போஸ் என்பவருடைய மனைவி அன்னலட்சுமி ஆகியோர் தேனி மாவட்ட ரியல் எஸ்டேட் சங்க மாவட்ட தலைவர் கே..குப்பமுத்து காளை தலைமையில், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது. நாங்கள் மட்டுமல்லாமல் 25 உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு பதிவு செய்யப்படாத சின்னமனூர் கருங்கட்டான்குளம் பால் வியாபாரிகள் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கி அந்த சங்கமானது இன்று வரை இயங்கி கொண்டு வருகிறது.  இதுவரையில் இந்த சங்கமானது பதிவு செய்யப்படவில்லை. சங்கம் பதிவு செய்யப்படாததால் சங்கத்திற்கு என்று துணை விதிகள் எதுவும் இல்லை. இந்த சங்கத்தில் நாங்கள் ஆரம்ப கால கட்டத்திலிருந்து உறுப்பினராக இருந்து வருகிறோம். இதில் அன்னலட்சுமி கணவர் போஸ் நாடார் இந்த சங்கத்தின் முன்னாள் உறுப்பினராவார். அவர் கடந்த 24.8.2020-ம் தேதி இறந்து விட்டார். அதனால் தற்போது அவருக்காக, அவருடைய மனைவி  எங்களுடன் இணைந்து இந்த புகாரை அளிக்கிறார். நாங்கள் இந்த சங்கத...

கெங்குவார்பட்டியை சேர்ந்த வக்கீல் ஸ்டீபன் தாக்கப்பட்டதை கண்டித்து தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, ஆக.14- தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் ஸ்டீபன். இந்நிலையில் கெங்குவார்பட்டியில் உள்ள பட்டி மந்தை பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் 13-வது வார்டு கவுன்சிலர் ராஜவேல் ஆகியோர் ஆதரவாளர்களுடன் சென்று சாலை பணியை தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்போது அங்கு சென்ற வக்கீல் ஸ்டீபன் அதை தட்டி கேட்டு உள்ளார். இதனால் அங்கிருந்த பேரூராட்சி தலைவர் ஆதரவாளர்கள் ஸ்டீபனை சரமாரியாக தாக்கியுள்ளனர் இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வக்கீல் ஸ்டீபன் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்காமல் உள்ளனர். இதற்கிடையே பேரூராட்சி தலைவர் தரப்பில் வக்கீல் ஸ்டீபன் மற்றும் அவரது தந்தை தமிழன் மீதும் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவதானப்பட்டி போலீசார் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதனை கண்டித்து தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தேனி வழக்கறிஞர் சங்க செயலாளர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமையில், தலைவர் செல்வன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ...

தேனியில் அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடந்தது

தேனி, ஆக.12- தேனி மாவட்டம். தேனி அருகே உள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் 12.8.2025 அன்று வேளாண்மைத்துறையின் சார்பில் அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்  முன்னிலையில் நடைபெற்றது இந்த கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது. மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் மாணவர்களும் பங்கேற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நவீன காலத்தின் அதிகப்படியான உற்பத்தி தேவைக்காகவும், குறைந்த காலத்தில் அதிக மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் வேதி உரங்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தையே செய்து வந்தார்கள் மேலும், விவசாயம் குறித்து படிக்காமலே அதிக மகசூல் பெறுவது குறித்து மேலான அறிவை பெற்றிருந்தனர். பாரம்பரிய முறையை பின்பற்றாம...

தேனியில் நடந்த இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநாட்டில், சாதனையாளர்களுக்கு பாராட்டு

தேனி, ஆக.10- இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் தேனி மாவட்ட மாநாடு மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் 9.8.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.  மாநில செயலாளர் பெத்தாட்சி ஆசாத், மாவட்ட செயலாளர் முல்லை முருகன், மாவட்ட பொருளாளர் கோவர்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் நூர் முகமது வரவேற்றார்.  நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் ராஜரத்தினம், மாநில துணை பொதுச்செயலாளர் இந்திரஜித், துணை தலைவர் அழகிரிசாமி, தேசிய குழு உறுப்பினர் தமிழ் மது ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.  நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், வினோரா லா அசோசியேட்ஸ், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின் போது ஆசிரியர் நற்பணியில் நல்லாசிரியர் விருது ப...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில்: எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கம்

தேனி, ஆக.5- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். கல்லூரியின் இணைச்செயலாளர் T.சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறையின் பேராசிரியர் டாக்டர்.T.வெனிஸ்குமார் வரவேற்றார்.  கல்லூரியின் முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம் கருத்தரங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை. வழங்கினார். இந்த கருத்தரங்கத்தில் ஓசூர் இன்னோவேட் இன்ஜினியரிங் புராடெக்ட் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் டாக்டர்.T.ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் பல்வேறு தொழில்துறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும், இத்தொழில்நுட்பம் தொடர்பான மென்பொருள் அப்ளிகேசன், எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்டையாக கொண்ட இன்டஸ்டிரியல் ஆட்டோமேசன் ஆகியவற்றை பற்றி விளக்கினார்....

யூடியூப் சேனலில் தவறான பேச்சு: நாயுடு-நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தினர், தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, ஆக.5- தமிழ்நாடு நாயுடு-நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சந்தோஷ் தலைமையில் அந்த இயக்கத்தினர் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர்.  அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, ஐந்தாம் தமிழர் சங்கம் தலைவர் பாண்டியன் என்பவர் 2.0 யூடியூப் சேனலில் நாயுடு சமுதாயத்தையும், நாயுடு சமுதாய பெண்கள் பற்றியும் தவறாக சித்தரித்து பேசி உள்ளார். இதனால் ஒட்டுமொத்த பெண்கள் மற்றும் எங்கள் சமுதாயத்தினர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலை தடை செய்யுமாறும், மேலும் சம்பந்தப்பட்ட பாண்டியன் என்பவர் மீது சட்ட நடவடிக்கை மூலம் கைது செய்ய வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. ........................... நாகராஜ், தலைமை நிருபர்  

தேனியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 395 பேர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்

  தேனி, ஆக.2- தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 2.8.2025 அன்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் 395 பேர்களுக்கு தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவிக்கையில்,  தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைத்தேடும் இளைஞர்கள் இதுபோன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதன் மூலம் தனியார் நிறுவனங்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியும் இம்முகாமில் தனியார் துறைகளில் பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ம...