கெங்குவார்பட்டியை சேர்ந்த வக்கீல் ஸ்டீபன் தாக்கப்பட்டதை கண்டித்து தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
தேனி, ஆக.14-
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் ஸ்டீபன். இந்நிலையில் கெங்குவார்பட்டியில் உள்ள பட்டி மந்தை பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் 13-வது வார்டு கவுன்சிலர் ராஜவேல் ஆகியோர் ஆதரவாளர்களுடன் சென்று சாலை பணியை தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்போது அங்கு சென்ற வக்கீல் ஸ்டீபன் அதை தட்டி கேட்டு உள்ளார்.
இதனால் அங்கிருந்த பேரூராட்சி தலைவர் ஆதரவாளர்கள் ஸ்டீபனை சரமாரியாக தாக்கியுள்ளனர்
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வக்கீல் ஸ்டீபன் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்காமல் உள்ளனர்.
இதற்கிடையே பேரூராட்சி தலைவர் தரப்பில் வக்கீல் ஸ்டீபன் மற்றும் அவரது தந்தை தமிழன் மீதும் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவதானப்பட்டி போலீசார் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்
இதனை கண்டித்து தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தேனி வழக்கறிஞர் சங்க செயலாளர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமையில், தலைவர் செல்வன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் செல்வ மனோகரன், கார்த்திக், ராமகிருஷ்ணன், ஹரிஹரசுதன், அழகேந்திரன், ஜோதி சொரூபன், கோபி மணிகண்டன், ராம் பிரசாத் (பெரியவர்), மன்சூர் அலிகான், சொக்கர், வீரசிவா உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வக்கீல் ஸ்டீனை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் அவர் மீது தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும்..
அதுபோல எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் வழக்குகளை தவறாக பயன்படுத்தி ஸ்டீபன் மற்றும் அவரது தந்தை தமிழன் மீது பொய் புகாராக எஸ்.சி/ எஸ்.டி வழக்கு பதிவு செய்யப்பட்டது எந்த அடிப்படையில் போலீசார் வழக்கை பதிவு செய்தார்கள் என வக்கீல் கேள்வி எழுப்பினர்.
மேலும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
.....................
Comments