Skip to main content

யூடியூப் சேனலில் தவறான பேச்சு: நாயுடு-நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தினர், தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, ஆக.5-

தமிழ்நாடு நாயுடு-நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சந்தோஷ் தலைமையில் அந்த இயக்கத்தினர் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். 
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
ஐந்தாம் தமிழர் சங்கம் தலைவர் பாண்டியன் என்பவர் 2.0 யூடியூப் சேனலில் நாயுடு சமுதாயத்தையும், நாயுடு சமுதாய பெண்கள் பற்றியும் தவறாக சித்தரித்து பேசி உள்ளார்.
இதனால் ஒட்டுமொத்த பெண்கள் மற்றும் எங்கள் சமுதாயத்தினர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலை தடை செய்யுமாறும், மேலும் சம்பந்தப்பட்ட பாண்டியன் என்பவர் மீது சட்ட நடவடிக்கை மூலம் கைது செய்ய வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
...........................
நாகராஜ், தலைமை நிருபர் 


Comments