Skip to main content

தேனியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 395 பேர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்

 

தேனி, ஆக.2-
தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 2.8.2025 அன்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் 395 பேர்களுக்கு தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
வேலைத்தேடும் இளைஞர்கள் இதுபோன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதன் மூலம் தனியார் நிறுவனங்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியும்

இம்முகாமில் தனியார் துறைகளில் பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், வேலைவாய்ப்பினை பெற இயலாதவர்கள் மனம் தளராமல், தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டும்.

தற்பொழுது வேலைக்கு செல்வதில் போட்டிகள் அதிகம் உள்ளது. அதற்கு நாம் முறையாக பயிற்சி செய்து, தங்களது திறமைகள் மூலம் எந்த துறையானாலும் வெற்றி பெற வேண்டும். நாம் உயர்ந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதற்கு கல்வி மிக மிக முக்கியம் கல்வியை முறையாக படித்திருந்தால் எங்கு சென்றும் பணிபுரியலாம் பிறருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் நாம் சுல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

அரசின் சார்பில் நடத்தப்படும் பல்வேறு விதமான போட்டித்தேர்வுகளுக்கும் முயற்சி செய்ய வேண்டும். அதிகமான தேர்வுகளை எழுதும் போதுதான் நாம் எந்திலையில் உள்ளோம். இன்னும் எவ்வளவு பயிற்சி செய்ய வேண்டும் போன்றவற்றை தெரிந்து அதற்கு தருந்தவாறு முயற்சி செய்ய வேண்டும்.தொடர்ச்சியாக முயற்சி செய்வதன் மூலமே பல்வேறு அனுபவங்களை பெற்று நமது இலக்கை அடைய முடியும். எதிர்காலத்தில் நீங்கள் பிறருக்கு முன்மாதியாக விளங்க வேண்டும். இம்முகாமில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து. இன்றைய தினம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 395 பேர்களுக்கு தனியார் துறையில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமாபிரபா, தேனி நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் தலைவர் தர்மராஜன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பொருளாளர் இராமச்சந்திரன், நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
................................
நாகராஜ், தலைமை நிருபர் 



Comments