சொத்து பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி.-யுமான கனிமொழி கருணாநிதி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கனிமொழி சார்பாக வழக்கறிஞர் மனுராஜ் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசில், “தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14-ம் தேதி உங்கள் கட்சி தலைமையகத்தில் டி.எம்.கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான ஓர் அவதூறு காணொலியை பத்திரிகையாளர்கள் முன்பு திரையிட்டிருக்கிறீர்கள். அந்த அவதூறு காணொலியில் எனது கட்சிக்காரர் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி கருணாநிதி பெயரை குறிப்பிட்டு ‘அபிடவிட் படியான சொத்து மதிப்பு 30.33 கோடி ரூபாய் மற்றும் கலைஞர் டிவி 800 கோடி ரூபாய் மொத்த மதிப்பு 830.33 கோடி’’ என புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது. இது அவரை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல, அடிப்படை ஆதாரமற்றது, கற்பனையானது மற்றும் ஆவணங்களில்- பதிவுகளில் இருப்பவற்றிற்கு முரண்பாடானது. கடந்த 10.2.2023 முதல் என் கட்சிக்காரர் கலைஞர் ட...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,