தேனி மாவட்ட மைய நூலக வளாகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமை தாங்கி நூலக நண்பர்கள் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள் முன்னிலை வகித்தார். மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் முத்துக்குமரன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நூலகர் வாசகர் வட்ட பொருளாளர் நாணயம் சிதம்பரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் 3-ம் நிலை நூலகர் மாலதி நன்றி கூறினார்.
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,

Comments