Skip to main content

Posts

Showing posts from October, 2025

தேனியில், ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

  தேனி, அக்.30-  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 29.10.2025 அன்று நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சுந்தரபாண்டி முன்னிலை வகித்தார்.   ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சுருளி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ரதவேல், பாண்டி, முத்துக்குமார், கணபதி உள்பட ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தினை ரூ.10 ஆயிரமாக  உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும்.  ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் இண...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: குறவர் சமூக மக்களுக்காக வன வேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி, அக்.27- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வன வேங்கைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமையில் தேனி மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் ஏகலைவன் ஆகியோர் முன்னிலையில் குறவர் சமூக மக்கள் 27.10.2025 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள்  எழுப்பினார்கள். இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், இந்து (SC) குறவர் சமூக மக்கள் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடவீர நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட  அம்மாபட்டி கிராமம் இளவெயினி நகர் பகுதியில் மற்றும் தேனி மாவட்ட முழுவதும் வசித்து வருகிறோம்.  மேலும் கடந்த 2017-ம் ஆண்டு மேற்கண்ட இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா தேனி நகர் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கக்கூடிய குறவர் சமூக மக்களுக்கு அன்றைய மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட பட்டா வழங்கிய இடத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக தனி தரைதளம் 175 குடியிப்புகள் கட்டி முடிக்கப்பட்டு குறவர் (SC) 88 குடும்ப...

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வார்டு சபா சிறப்பு கூட்டம்

தேனி, அக்.27- தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு பகுதியில் வார்டு சபா சிறப்பு கூட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் 27.10.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கவுன்சிலர் கடவுள் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் கோபால் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் நகராட்சி ஊழியர்கள், வார்டு பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கருவேல்நாயக்கன்பட்டி தேவர் சிலை அருகே உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். கருவேல்நாயக்கன்பட்டிக்கு வடக்கு பகுதியில் இருந்து  வரும் மெயின் அணுகு சாலையில் உள்ள சாக்கடை பாலத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதனால் சாலையில் உள்ள சாக்கடை பாலத்தை 25 அடி தூரம் வடக்கு பகுதிக்கு தள்ளி அமைக்க வேண்டும். அதுபோல கருவேல்நாயக்கன்பட்டி தேவர் சிலை அருகே சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். மந்தையம்மன் கோவிலில் இருந்து மேற்கு தெரு செல்லும் சிமெண்ட் சாலையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை உடனடியாக மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்பட 12 அடிப்படை கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்ற...

தேனி பஸ் நிலையத்தில் தவித்த ஆதரவற்ற மூதாட்டிகளை முதியோர் இல்லத்தில் ஒப்படைத்த மருந்தாளுநர்

தேனி, அக்.25- தேனி பஸ் நிலையத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க இரு மூதாட்டிகள் ஆதரவின்றி தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் போலீசார் உதவியுடன் அவர்களை மீட்டார். அதன்பின்னர் அவர்களை விசாரித்ததில் அவர்கள் பெயர் கனகா 70 மற்றும் வசந்தா 68 என்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. மதுரை மாவட்டத்தை சேர்ந்த அவர்களை அவர்களது குடும்பத்தினர்களே தேனி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.  இதனைத்தொடர்ந்து ஆதரவின்றி தவித்த மூதாட்டிகளுக்கு உணவு கொடுத்து மாற்று உடை அணிவித்து அவர்களை தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டியில்  உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட்டார். இதுகுறித்து ரஞ்சித்குமார் கூறுகையில், வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து தேனி மாவட்டத்தில் தவிக்க விட்டு செல்லும் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிறது. மனிதநேயத்துடன் முதியோர்களை பாதுகாத்து பராமரிக்க முன்வர வேண்டும். வெளியூர் மற்றும் கேரளாவில் இருந்து முதியவர்களை தேனி மாவட்டத்தில் விட்டு செல்பவர்களை சமூக நலத்துறையினர் கண்...

தேனியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

தேனி, அக்.12- தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஸ்வகர்ம சுவாமி பட ஊர்வலம் தேனியில் 12.10.2025 அன்று நடைபெற்றது.   ஊர்வலத்திற்கு சிலமலையை சேர்ந்த சைவ சமய திருப்பணி செம்மல் பாண்டி நாட்டு கோச்செங்கணர் ஆன்மீக வள்ளலார் ஸ்ரீ எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பாலமுருகன், உதவி தலைவர் சொக்கர்ராஜா, வெளிச்சம் அறக்கட்டளை நாணயம் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ சுவாமிகள் தொடங்கி வைத்தார்.  ஊர்வலம் தேனி மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு பகுதியில் இருந்து தொடங்கி விழா நடைபெற்ற வசந்த மஹால் நிறைவடைந்தது.  இதனைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீ விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ விஸ்வகர்ம சமுதாய மக்கள் வாழ்ந்து வந்த விதம், செய்கின்ற வேலைகள் குறித்து விளக்கி பேசினார்.  இந்த கூட்டத்தில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர்...

தேனி மாவட்டத்தில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: ஜல்லிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்றார்

தேனி, அக்.11- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 11.10.2025 அன்று நடைபெற்றது. இதில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில், கிராம சபை கூட்டத்தின் நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கிராமப்புறங்களை விரைவாக முன்னேற்றம் அடைய செய்யவும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கிராம சபை கூட்டத்தின் மூலம், கிராமப்புறத்திற்கு தேவையான குடிநீர், மயான வசதி உள்ளிட்ட பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கைக...

தேனி மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் மூலம் இதுவரை 206 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, அக்.10 - தேனி மாவட்டம். பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி சார்பில் 10.10.2025 அன்று நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 47 லட்சம் வங்கி கடனுதவிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், உயர்கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும். இக்கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக் கடன் திட்டங்கள். வட்டி சலுகை, திருப்பிச் செலுத்தும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து முறையாக படிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு கல்வி மிக மிக முக்கியமானதாகும். நாம் முறையாக கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினர் இடையே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வி ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ...

தீபாவளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, அக்.10- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் கார்த்திக் மற்றும் முனியாண்டி, கணேசன் உள்பட கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் , இந்திய நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 20.10.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைகள் என்பது குடும்பங்கள் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடி களிப்பதற்காகவும், குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த சமயங்களில் மதுக்கடைகள் திறந்து வைத்திருப்பதன் மூலமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்துவிட்டு பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு குடும்ப தலைவிகளை சித்ரவதை செய்வது,, குழந்தைகளை சித்ரவதை செய்வது என்று பல்வேறு இன்னல்களுக்கு குடும்பத்தினர் ஆளாகின்றனர். மேலும் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதன் மூலம் விபத்துகளி...