ஹைவேவிஸ் பேரூராட்சியில், தலைவர் பதவிக்கு முறைகேடாக நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: 7 கவுன்சிலர்கள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு
தேனி, ஜூலை.29- தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் 15-வது வார்டு கவுன்சிலர்கள் பதவி உள்ளன. இதிலிருந்து தலைவர் பதவி தேர்வு செய்யும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பேரூராட்சியில் தலைவராக இருந்தவர் இறப்பின் காரணமாக பேரூராட்சி தலைவர் பதவி காலியாகி இருந்து வருகிறது. இந்த பேரூராட்சி தலைவர் பதவியை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி அந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் அவர்களிடம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 15-வது வார்டு கவுன்சிலர் ஹேமா தலைமையில் 7 கவுன்சிலர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பதாக பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் கடந்த 16-ந் தேதி தேர்தல் அறிவிப்பு கடிதத்தை எங்களிடம் கொடுத்தார். அந்த கடிதத்தில் கடந்த 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் 10.30 மணிக்கு ஹைவேவிஸ் பேரூர...