Skip to main content

Posts

தேனி நகர மக்களின் கனவு நினைவானது; மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படகு சவாரி திட்டத்திற்கான பூஜை:

தேனி, டிச.26- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் படகுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பல ஆண்டுகளாக வரப்பெற்றதை தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்களால் ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 26.12.2025 அன்று மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளுக்கான பூஜையை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வ...

தமிழகத்தில் மது குடிக்க உரிமம் இல்லாதவர்களுக்கு; மது விற்க தடை கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தேனி கலெக்டரிடம் மனு

தேனி,டிச.23- தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் கவுதமன் தலைமையில், மாநில செயலாளர்கள் ஜெயபால்,ஜெயக்குமார் ,மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி,  மாவட்ட இளைஞரணி செயலாளர் அபினேஷ், இளைஞரணி நிர்வாகிகள் விருமாண்டி, சூர்யபிரகாஷ், நவீன், நதீஷ்குமார் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர்.  அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனங்கள் மது குடிக்க உரிமம் இல்லாதவர்களுக்கு மது விற்க அதிகாரமில்லை. தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் 1937 முதல் (1971 முதல் 1974 ஆண்டுகள் தவிர) தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. அந்த சட்டத்தின் விதிகளின் படி மதுவை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்தவதற்கும், உபயோகப்படுத்துவதற்கும், முறையான உரிமம் அவசியம். சரத்து 16-ன்படி விதிவிலக்காக மருத்துவம், அறிவியல், தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக மட்டும் மதுவை உற்பத்தி செய்ய, விற்க, பயன்படுத்துவதற்கு உரிமம் வழங்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வேறு யாருக்கும், எதற்காகவும் எந்த விதி விலக்கும் அளிக்க சட்டத்தில் இடமில்லை. இந்த நிலையில...

தேனி-க.விலக்கு அருகே: சங்கர் நகர் வீட்டு மனை விற்பனை துவக்க விழா; நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர்

தேனி, டிச.22– தேனி மாவட்டம், க.விலக்கில் இருந்து கண்டமனூர் செல்லும் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி எதிரில் அமைந்துள்ள சங்கர் நகர் வீட்டு மனை விற்பனை துவக்க விழா 21.12.2025 அன்று நடைபெற்றது. இந்த துவக்க விழா நிகழ்ச்சிக்கு வினோரா பவுண்டேஷன் நிறுவன தலைவர் வி.ஆர். ராஜன் தலைமை வகித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மேலாளர் குமார் வரவேற்றார். வீட்டு மனை விற்பனை துவக்கத்தை பிரபல நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் வீட்டு மனை பிளாட்கள் வாங்கியவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி ஊக்கமளித்தனர். இந்த சங்கர் நகரில் வீட்டுமனைகள் அகலமான சாலை வசதி, சிறந்த குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதியுடன் அமைந்துள்ளன. இங்கு 3 சென்ட் மற்றும் 6 சென்ட் வீட்டு மனை பிரிவுகள் உள்ளன. இங்குள்ள வீட்டு மனைகள் DTCP அங்கீகாரம் பெற்றதும், RERA ஒப்புதல் பெற்ற பிளாட்களாகவும் உள்ளன. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் தேனி மேலப்பேடடை இந்து நாடார் உறவின்முறை சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜமோகன், வைகை அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். கணேஷ், ராயல் அரிமா சங்கத்தி...

தேனியில் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கத்தின் முப்பெரும் விழா

தேனி, டிச.22- தேனியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கத்தின் 3-ம் ஆண்டு முப்பெரும் விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் 21.12.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்க தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் மாரீஸ்வரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் ஆலோசகர் நாகராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் சார்பில் கண்ணன், பசுமை இயக்கம் சார்பில் வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், ஆன்மீக சொற்பொழிவாளர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, 2024 - 2025ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கி, ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினர்.  நிகழ்ச்சியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பாலநடராஜன் தொகுத்து வழங்கினார். இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கல...

தேனி மாவட்டத்தில் 4-வது புத்தக திருவிழாவினை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்

தேனி, டிச.22- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு புத்தகம் வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள பல்வேறு வகையான நூல்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காக மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 4-வது புத்தக திருவிழா 21.12.205 முதல் 28.12.2025 வரை நடைபெறவுள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாக மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 4-வது புத்தகத் திருவிழாவினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து புத்தக அரங்குகளையும், பல்வேறு துறைகளில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக் கண்காட்சி அரங்குகனையும் பார்வையிட்டனர். விழாவில் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில்,  மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடமும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கு...

தேனியில் SIR பணிகள் தொடர்பாக வாக்காளர்களின் கணக்கிட்டு படிவங்களை BLO'S மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டார்

தேனி, டிச.13- தேனி மாவட்டம். தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (13.12.2025), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் தொடர்பாக வாக்காளர்களின் கணக்கிட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று. தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனூர், 201கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 4:112025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer) இல்லம் தோறும் சென்று. கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யப்பட்டு, வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலானது 19.12.2025 அன்று வெளியிடப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்று தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில், 85 வயதுக்கு மேற்பட்ட இரட்டை பதிவு, இடம் பெயர்த...

தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு பகுதியில் புதிய மின் மாற்றி திறப்பு : தேனி வடக்கு நகர திமுக பொறுப்பாளர், கவுன்சிலர் பாலமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தேனி, டிச.13- தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு பகுதியில் மின் அழுத்த குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்வதற்கு 5-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவினை பரிசீலனை செய்த மின்வாரியத்துறை புதிய மின்மாற்றியை மந்தைகுளம் கண்மாய் கிழக்குக்கரை பகுதியில் அமைத்தது.  இதனைத்தொடர்ந்து இந்த புதிய மின் மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக 13.12.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு 5-வது கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் தலைமை தாங்கினார் தேனி மின் பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) முருகேஸ்பதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் (வடக்கு) பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த புதிய மின்மாற்றியை தேனி வடக்கு திமுக பொறுப்பாளர் கவுன்சிலர் சூர்யா பாலமுருகன் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார அலுவலர் ஜெயராமன், ஊர் பிரமுகர்கள் துரைராஜ், சாதிக், ராஜாராம், பாலகுரு, ஐயப்பன் உள்பட மின்வாரிய ஊழியர்கள் மற்ற...

குரும்பாகவுண்டர் இன மக்களுக்கு வருகின்ற தேர்தல்களில் MLA., MP., சீட் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவு: தேனி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு

தேனி, டிச.7- தேனி மாவட்ட குரும்பாகவுண்டர் இன மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கிருஷ்ண பக்தர் கனகதாசரின் 525-வது ஜெயந்தி விழா தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் 7.12.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு டான்பெட் முன்னாள் மாநில தலைவர் எல்லப்பட்டி முருகன் தலைமை தாங்கினார். தர்மா பவுண்டேஷன் இயக்குனர் ரவி முன்னிலை வகித்தார். ஆடு வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் வனக்குழு முருகன் வரவேற்றார். கூட்டத்தில் அகில இந்திய பழங்குடியினர் நிறுவன தலைவர் வக்கீல் விஜயன் பார்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு குரும்பர் பழங்குடி முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் உதகை செங்குட்டுவன், ராசிங்காபுரம் அழகர்ராஜா, அரசு ஒப்பந்ததாரர் பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிகண்டன், மகளிர் குழுவை சேர்ந்த ராம்ஜி ஸ்ரீ ஆனந்த சாய் அன்னதான சேவை இயக்குனர் விஜயலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி செல்வம் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  தேனி மாவட்டத்தில் குரும்பா கவுண்டர் இன மக்கள் சமுதாயம் சார்பில் வீரபாண்டியி...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, டிச.5- அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 4.12.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை பொதுச் செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட செயலாளர் லாசர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் ஜெரால்டு, தேனி மாவட்ட போதகர் அணி செயலாளர் மாறன், மதுரை மாவட்ட பேராயர் இன்பராஜ், தேனி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாஸ்கரன், தென் மண்டல செயலாளர் எடிசன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஈரோடு பேராயர் ஜான் வெஸ்லி, தேனி நகர செயலாளர் கணேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ .ஆர்) பணியை நிறுத்த வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.  தனியார் பல்கலைக்கழகம் உருவாக்கும் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற பெறக்கூடாது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஷிப்ட் முறையில் இயங்கும் பாடப்பிரிவினை ரத்து செய்து விட்டு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரெகுலர் பயிற்சி முறையில் கல்லூரி இயங்க வழிவகை செய்...

திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை திட்டத்தை; 2 திட்டமாக பிரிக்க வேண்டும்: போராட்டக்குழு தலைவர் R.சங்கரநாராயணன் பேட்டி

தேனி, டிச.5- திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் தேனி-போடி ரோட்டில் உள்ள கிருஷ்ணா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போராட்டக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் போது தேனி மாவட்டத்தின் ரயில் சேவை தேவைகள் குறித்து, டெல்லி சென்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து, திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளபடி, பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்த ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும். அதனால் திண்டுக்கல்- லோயர்கேம்ப் வரை ஒரு திட்டமும், லோயர்கேம்ப்-சபரிமலை என மற்றொரு திட்டமும் என திண்டுக்கல் குமுளி அகல ரயில் திட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து செய்தால் திண்டுக்கல்- லோயர்க...